Published : 11 Oct 2019 09:44 AM
Last Updated : 11 Oct 2019 09:44 AM

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் ராகுல், பவார் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க அமித் ஷா வலியுறுத்தல்

சோலாபூர்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ராகுல் காந்தியும் சரத் பவாரும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.

மகாராஷ்டிராவில் வரும் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சாங்லி மற்றும் சோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் அக்கட்சியின் தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசினார்.

சாங்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷா பேசும்போது, “நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானதும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தார். மிகவும் முக்கியமான இந்த நடவடிக்கையால் சர்தார் வல்லபபாய் படேலின் ஒருங்கிணைந்த இந்தியா என்ற கனவு நனவாகி உள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸும் எதிர்ப்பு தெரிவித் துள்ளன. சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் தங்கள் நிலைப் பாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் மகாராஷ்டிர மக்களுக்கு தெரி விக்க வேண்டும்.

காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என இந்த நாட்டு மக்கள் அனைவரும் விரும்பும் நிலையில், நீங்கள் மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண் டும். வாக்கு வங்கி அரசியல் செய்ய நீங்கள் விரும்புகிறீர்கள். அதனால்தான் எதிர்க்கிறீர்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x