Published : 11 Oct 2019 07:20 AM
Last Updated : 11 Oct 2019 07:20 AM

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வணிகத் தொடர்பு: தமிழக சிற்பக்கலையை பறைசாற்றும் சீன கோயில்

புதுடெல்லி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை நிகழ்த்தவுள்ளனர்.

இதில் சிறப்பம்சம் என்ன வென்றால், இந்த சந்திப்பு வழக்கத்துக்கு மாறாக டெல்லி யில் இல்லாமல் தமிழகத்தில் நடைபெறுகிறது என்பதுதான்.

இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு தொடர்பான முதல் கட்ட அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில், சென்னை அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான மாமல்ல புரத்தில் இந்த சந்திப்பு நடை பெறும் எனத் தெரிவிக்கப்பட் டிருந்தது. அன்று முதல், இந்தியா முழுவதும் மாமல்ல புரம் ஒரு பேசுபொருளாக மாறியது. இந்தியா மட்டு மல்லாமல், சீனாவில் உள்ள ஊடகங்களும் மாமல்லபுரம் குறித்த பின்னணியை அலசி வருகின்றன.

வட இந்தியாவில் எத் தனையோ சுற்றுலா தலங்கள் அமைந்திருக்க, எதற்காக தென் கோடியில் அமைந்திருக்கும் மாமல்லபுரத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதே தற்போது அதிகம் புழங்கும் கேள்வியாக உள்ளது. வரலாற்றை சற்று ஆராய்ந்து பார்த்தால் இதற்கான விடை புலப்படும்.

மாமல்லபுரத்துக்கும், சீனா வுக்கும் ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பாகவே வணிக மற்றும் கலாச்சார ரீதியிலான தொடர்பு இருந்திருக்கிறது என்பதை பல்வேறு வரலாற்று குறிப்புகள் எடுத்துரைக்கின் றன. 5, 6-ம் நூற்றாண்டுகளில் பல்லவ சாம்ராஜ்யம் அமைந் திருந்த காலக்கட்டத்தில், சீனா வுக்கும், தமிழகத்துக்கும் இடையே கடல்வழி வணிகங் கள் நடைபெற்றிருக்கின்றன.

குறிப்பாக, மாமல்லபுரத் துக்கும், சீனாவின் ஃப்யூஜி யான் மாகாணத்துக்கும் இடையே கடல் வழியாக பெரிய அளவில் ஏற்றுமதிகளும், இறக்குமதிகளும் நிகழ்ந்திருக் கின்றன. இதற்கு சாட்சியாக, ஃப்யூஜியான் மாகா ணத்தில் நடைபெற்ற அகழ் வாராய்ச்சிகளில் ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன.

அம்மாகாணத்தில் அமைந் துள்ள குவான்சோவ் நகரில் தமிழகத்தின் இந்து கோயில் களின் கட்டமைப்பில் கட்டப் பட்ட நூற்றுக்கணக்கான வழி பாட்டு தலங்களையும், சிற்பங் களையும், தமிழ் கல்வெட்டு களையும் இன்றளவும் காண முடிகிறது.

அந்நகரில் உள்ள கய் உவான் கோயிலில் உள்ள புத்தர் சிற்பங்களும், தமிழகத் தின் காவிரி டெல்டா பகுதியில் உள்ள கோயில்களில் அமைந் திருக்கும் சிற்பங்களும் நூறு சதவீதம் ஒத்திருப்பதாக வர லாற்றாசிரியர்கள் தெரிவிக் கின்றனர்.

தமிழகத்திலிருந்து சிற்பக் கலைஞர்களை சீனாவுக்கு வரவழைத்து இந்தக் கோயில் களும், சிற்பங்களும் வடி வமைக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர் கள் கருதுகின்றனர். இல்லை யெனில், தமிழக சிற்பக் கலையை கற்றுத் தேர்ந்த சீன பொறியாளர்கள் இந்த கட்டிடங் களை எழுப்பியிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி, சீனாவின் புகழ்பெற்ற புத்த துறவி ஹுயுன் சங், பல்லவர்களின் தலை நகரான காஞ்சிபுரத்துக்கு வந்ததற்கும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த புத்தத் துறவி போதி தர்மர், சீனாவுக்கு சென்று புத்த மதத்தையும், குங்ஃபூ தற்காப்பு கலையை பரப்பியதற்கும் ஏரா ளமான சான்றுகள் உள்ளன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மாமல்லபுரத்துடன் வணிக, கலாச்சார ரீதியிலான தொடர்பில் இருந்த ஃப்யூஜி யான் மாகாணத்தின் ஆளுந ராக தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் 1998 முதல் 2002 வரை பதவி வகித்திருக்கிறார்.

மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் சந்திப்பில், சீன அதிபரிடம் இந்த வரலாற்று பின்னணிகளை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கூறு வார் என மத்திய அரசு வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x