Published : 10 Oct 2019 04:12 PM
Last Updated : 10 Oct 2019 04:12 PM

ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் அறிமுகமாகிறது டெக்னோவின் அதி நவீன மாடல் போன் 

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி,

இந்தியாவில் வரும் 14ம் தேதி அதி நவீன மாடல் போன் ஒன்றை ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் டெக்னோ அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரு காலத்தில் பேசுவதற்கு மட்டுமே தொலைபேசி என்ற நிலை இருந்தது. பேசுவது தவிர, வெறும் தொலைபேசி என்ற நிலையைத் தாண்டி இன்று பல்வேறு செயலிகளில் மனிதனின் வாழ்வோடு பின்னிபிணைந்துவிட்டன செல்போன்கள். படம் பிடிக்கும் ஆன்ட்ராய்டு செல்போன்களில் உள்ள செயலிகளில் நம்பமுடியாத பிக்சல்களைக்கொண்ட கொண்ட கேமராக்கள் வரத் தொடங்கிவிட்டன.

இதன் சமீபத்திய தொழில்நுட்பம்தான் டாட் இன் டிஸ்ப்ளே. இதன்மூலம் நாம் படம் பிடிக்கும் காட்சிகளின் நுண்ணழகோடு துல்லியமாக மானிட்டரில் காணலாம். அதே நிலையிலான துல்லிய அழகோடு காட்சிகளும் பதிவாகும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போர்ன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. டாட் இன் டிஸ்ப்ளே மொபைல்கள் மிகப்பெரிய விலையில்தான் சந்தையில் கிடைத்துவந்தது.

ஆனால் ஹாங்காங்கை தளமாகக் கொண்ட டிரான்ஷன் ஹோல்டிங்ஸின் துணை நிறுவனமான டெக்னோ மொபைல் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாகத் தர முன்வந்துள்ளது. இதன் சமீபத்திய வெளியீடான 'டாட்-இன்-டிஸ்ப்ளே' மாடல் ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 14ல் இந்தியாவில் அறிமுகமாகிறது.

'டாட்-இன்-டிஸ்ப்ளே' அடிப்படையில் ஒரு பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. இந்த போன் வெளியானபின் அதிநவீன தொழில்நுட்பத்தை மிகவும் குறைந்த விலையில் ரூ .10,000 விலை பிரிவுக்குள் வழங்கும் ஒரே கைப்பேசி தயாரிப்பு நிறுவனமாக டெக்னோ மாறும் என்று கூறப்படுகிறது.

எனினும் இந்த தொழில்நுட்பத்தை மிகக் குறைந்த விலையில் வழங்குவதற்கு சில விமர்சனங்களும் உருவாகியுள்ளன.

"ரூ .8,000 முதல் ரூ .15,000 விலைகளில் கிடைக்காத அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரீமியம் ஸ்மார்ட்போன் கேமரா அனுபவத்தை வழங்க டெக்னோ உறுதிபூண்டுள்ளது. ஆனால் புதிய ஸ்மார்ட்போன் சாத்தியங்களில் உருவான 'கேமன் 12 ஏர்' என்று அழைக்கப்படும் தொழில்நுட்ப வகையை அறிமுகப்படுத்துவது சாத்தியக்குறைவானது. இப்படி அறிமுகப்படுத்துவதால் இந்த வகை பிரிவை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதைத் தவிர வேறு சாதனை இதில் இல்லை "என்று தொழில்துறை வட்டாரங்கள் ஐஏஎன்எஸ்ஸிடம் இன்று தெரிவித்தன.

இந்த கைபேசி தயாரிப்புநிறுவனம் ஏற்கெனவே தனது முதல் மூன்று பின்புற கேமரா ஸ்மார்ட்போனை 'கேமன் ஐ 4' என்ற பெயரில் ரூ .10,000 க்கு கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x