Published : 09 Oct 2019 09:18 AM
Last Updated : 09 Oct 2019 09:18 AM

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் 20 தீவிரவாத முகாம்களை அமைத்தது பாகிஸ்தான்: ராணுவ மூத்த அதிகாரி தகவல்

புதுடெல்லி

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் 20 தீவிரவாத முகாம் கள், 20 தாக்குதல் மையங்களை பாகிஸ்தான் தொடங்கியிருப்ப தாகத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இந்திய ராணு வத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:

கடந்த பிப்ரவரியில் பாகிஸ் தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு நடத்திய புல்வாமா தாக்கு தலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தானால் இயக் கப்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் 20 தீவிரவாத முகாம்களையும், 20 ஊடுருவல் மையங்களையும் பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. இந்த மையங்கள், முகாம்கள் ஒவ் வொன்றிலும் தலா 50 தீவிர வாதிகள் தங்கி உள்ளனர்.

ஒரு பகுதியில் தாக்குதல் நடத்திவிட்டு இந்திய ராணுவத் தினரை திசைதிருப்பி இந்தியா வுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதே இந்த தீவிர வாத முகாம்களின் நோக்கமாகும்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப் பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு இந்தியா மீது தாக்குதல் நடத்தும் வகையில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆனால் பெரிய அளவில் தாக்கு தலை நடத்த முடியாததால் பாகிஸ் தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர் என்று புலனாய்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எப்போதெல் லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஊடுருவுவதற்கு அவர்கள் முயற்சி செய்து வரு கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் கூறும் போது, “200 முதல் 300 தீவிரவாதி கள் வரை எல்லைக் கட்டுப் பாட்டுக் கோட்டுப் பகுதியில் காத்திருப்பதாகத் தெரியவந் துள்ளது. இந்த எண்ணிக்கை அவ்வப்போது கூடவும், குறைய வும் செய்வதாகத் தெரியவந் துள்ளது. குளிர்காலம் தொடங்கு வதற்கு முன்பாக இந்தியாவுக்குள் ஊடுருவ அவர்கள் காத்திருக் கின்றனர்.

சமீப காலமாக ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தான் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக கனாசக், ஆர்.எஸ்.புரா, ஹிரா நகர், பூஞ்ச், ரஜவுரி, உரி, நம்ப்ளா, கமா, கெரன் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்பு களின் தீவிரவாதிகள் இந்தியா வுக்குள் ஊடுருவக் காத்திருக் கின்றனர். இவர்கள் அண்மை யில் நடத்திய கூட்டத்தின் போது இந்திய பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதலை அதிகரிக்கவும் முடிவு செய் திருப்பதாகத் தெரியவந்துள்ளது” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x