Published : 09 Oct 2019 06:50 AM
Last Updated : 09 Oct 2019 06:50 AM

தெலங்கானாவில் 4-வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்; பணிக்கு வராத 45 ஆயிரம் பேர் மீது ‘டிஸ்மிஸ்' நடவடிக்கை எடுக்க முடிவு- தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் எச்சரிக்கை

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத் 

தெலங்கானா மாநிலத்தில் அரசு பஸ் போக்குவரத்து கழகத்தினர் 4-வது நாளாக நேற்றும் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தனியார் ஊழியர்களை வைத்து போலீஸ் பாதுகாப்புடன் சில பஸ்கள் இயக்கப்பட்டன. அரசின் கெடுவுக்குள் பணிக்கு திரும்பாத சுமார் 45 ஆயிரம் ஊழியர்கள் தாங்களாகவே தங்களை சஸ்பெண்ட் செய்து கொண்டனர் என முதல்வர் கே. சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தெலங்கானா மாநில அரசு பஸ் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஸ் போக்குவரத்தை அரசு துறையுடன் இணைக்க வேண்டும், தனியார் பஸ் களை ஊக்குவிக்கக்கூடாது என்பது உட்பட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள் கூட்டாக அரசிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்ததால், இனி போராட்டத்தில் இறங்குவதுதான் ஒரே வழி என அவர்கள் முடிவு செய் தனர். அதன்படி, போராட்டம் நடத்தப் போவதாக அனைத்து பஸ் ஊழியர் சங்கத்தினரும் அரசுக்கு நோட்டீஸ் வழங்கினர். கோரிக்கைகளை நிறை வேற்றாவிடில் அக்டோபர் 4-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துவது என அவர்கள் தீர்மானித் தனர். இந்த அறிவிப்பின்படி, தெலங்கானா மாநிலத்தில் கடந்த 3-ம் தேதி நள் ளிரவு 12 மணி முதல் காலவரையற்ற போராட்டம் தொடங்கியது. இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஊழியர்கள் பங் கேற்றனர். ஆனால், போலீ ஸார், தனியார் நிறுவன ஊழியர்கள், டிரைவர் களின் உதவியுடன் சில பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசி போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பஸ் ஊழியர் கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டுமெனவும், இல்லாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆயினும் 50 ஆயிரம் ஊழியர்களில் வெறும் 150 ஊழியர்கள் மட்டுமே பணிக்குத் திரும்பினர். போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தசரா விடுமுறை, பள்ளி, கல்லூரி விடு முறையை முன்னிட்டு வெளியூருக்கு சென்றவர்கள், தெலங்கானா மாநிலத் துக்கு சுற்றுலா வந்தவர்கள் மீண்டும் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்ற னர். இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. வரும் 10-ம் தேதி முதல் (நாளை) பள்ளி, கல்லூரிகள் தசரா விடுமுறையை தொடர்ந்து மீண்டும் திறப்பதால், பஸ்களை இயக்கியே தீரவேண்டும் என்கிற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது தெலங் கானா அரசு. இதனால், நேற்று தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், போக்குவரத்து அமைச்சர் அஜய், அரசு பஸ் போக்குவரத்து கழக அதிகாரி கள் மற்றும் அரசு உயர் அதிகாரி களுடன் அவரச ஆலோசனை கூட் டத்தை நடத்தினார். இதில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பணிக்கு திரும்பாத சுமார் 45 ஆயிரம் ஊழியர்கள் தாங்களாகவே சஸ் பெண்ட் செய்து கொண்டனர். மக்களின் நலமே அரசுக்கு முக்கியம். ஆதலால், பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம், பணிக்கு வாருங் கள் என அழைத்தால், யாரும் பணிக்கு திரும்பவில்லை. ஆதலால், சுமார் 45 ஆயிரம் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்து கொண்டனர். இவர்களுக்கு பதிலாக உடனடியாக தனியார் ஓட்டுநர்கள், கண்டக்டர்களை நியமனம் செய்து 10-ம் தேதிமுதல் பஸ்களை முழு வீச்சுடன் இயக்க வேண்டுமென நேற்று மாலை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். சஸ்பெண்ட் நடவடிக்கையைத் தொடர்ந்து ஊழியர் கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கையும் எடுக்க வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, பணி மனைகள் முன்பு அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள் 4வது நாளாக நேற்றும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கருப்பு துணியால் வாய், கண்களை கட்டிக்கொண்டும், சாலையில் அமர்ந் தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்துக்கு காங் கிரஸ், பாஜ, தெலுங்கு தேச கட்சி கள் ஆதரவு தெரிவித்த தோடு மட்டுமல்லாது, ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு தெலங் கானா அரசை தீவிரமாக விமர்சித்து வருகின்றனர்.

இதனால் தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரு கிறது. காலவரையற்ற போராட்டத்தைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் தொடங்குவது குறித்து பஸ் போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி விகரமார்க்கா கூறிய தாவது:

தனி தெலங்கானா மாநிலம் கோரி நடந்த போராட்டங்களில் அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்களின் பங்கு பெரும் பங்காகும். இவர்கள் காலவரை யற்ற தீவிர போராட்டத்தில் குதித்ததால் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித் தது. பின்னர் தெலங்கானா போராட்டம் மக்கள் போராட்டமாக தீவிரமடைந்து இறுதியில் வெற்றி பெற்றது.

ஆனால், தற்போது இதே போக்கு வரத்து ஊழியர்கள் கே. சந்திரசேகர ராவின் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால், இவர்களை முதல்வர் ராவ் அலட்சியப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதோடு, போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகை யில் தனியார் ஆட்களை கொண்டு வந்து பஸ்களை இயக்க பார்க்கிறார்.

இதனால் போராட்டம் மேலும் தீவிரம் அடையும். அடுத்த முறை இவரது ஆட்சி கவிழும்.

இவ்வாறு காங்கிரஸ் மூத்த நிர்வாகி விகரமார்க்கா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x