Published : 08 Oct 2019 04:29 PM
Last Updated : 08 Oct 2019 04:29 PM

தீவிரவாத தாக்குதலை அரசு கையாள்வதில் மாற்றம் கொண்டுவந்தது பாலகோட் தாக்குதல்:விமானப்படைத் தளபதி பேச்சு

காஜியாபாத்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப்பின்புதான் தீவிரவாத தாக்குதலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் அரசின் நிலையில் மாற்றம் வந்தது என்று விமானப்படைத் தளபதி ஏர்சீப் மார்ஷல் ஆர்எக்.எஸ் பதூரியா தெரிவித்தார்

இந்திய விமானப்படையின் 87-வது ஆண்டுவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டு ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் விமானப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதை, போர்விமானங்களின் சாகச நிகழ்ச்சி, வீர ரீத செயல்கள் செய்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விமானப்படை தினத்தையொட்டி, விமானப்படைத் தளபதி ஆர்கேஎஸ் பதூரியா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எதிரிகளை எதிர்கொள்ளும் விதத்தில் எப்போதும் இந்திய விமானப்படை கண்டிப்பாக உயர் திறன்மிக்க வகையில் இருத்தல் வேண்டும். எதிர்கால தேவைக்கு ஏற்றார்போல் தரமான பயிற்சியும், வெற்றிகரமான செயல்பாட்டையும் உறுதி செய்ய வேண்டும்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட பாலகோட் தாக்குதலில் இருந்துதான் தீவிரவாத தாக்குதலை கையாளும் விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்தது, பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்த முடியும் என்று இந்திய விமானப்படையும் நிரூபித்தது.

இந்தியாவின் தற்போதைய பாதுகாப்புச்சூழல் அண்டை நாட்டால் தீவிரமான கவலைக்குள்ளாகி இருக்கி்றது. புல்வாமா தாக்குதலுக்குப்பின் தொடர்ந்து பாதுகாப்பில் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. நம்முடைய அனைத்து நிலைகளில் உச்சபட்ச பாதுகாப்பு இருந்தாலும், தகவல்தொழில்நுட்பம் மற்றும் சைபர் பிரிவில் இருந்து பாதுகாப்பு தொடர்பான தகவல்களை எதிர்பார்கிறோம்

உலக புவி அரசியல் சூழல் வேகமாக மாற்றி வருகிறது, நிலையில்லாத விஷயங்களில் தேசப்பாதுகாப்புக்கு ஏராளமான சவால்களை உருவாக்குகின்றன. ஆதலால், ஏற்கனவே இருக்கக்கூடிய விஷயங்களில் இருந்து நாம் விழிப்பாகவும், உஷாராகவும் இருப்பது முக்கியமாகும். இவ்வாறு பதூரியா தெரிவித்தார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x