Published : 08 Oct 2019 12:49 PM
Last Updated : 08 Oct 2019 12:49 PM

இந்த ஆண்டில் டாடா நிறுவனத்தில் ஒரு நானோ கார்கூட தயாரிப்பு இல்லை; ஒரு கார் மட்டுமே விற்பனை

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி,

2019-ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் டாடா நிறுவனத்தின் சார்பில் ஒரு நானோ கார்கூட தயாரிக்கப்படவில்லை. பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஒரு கார் விற்பனையாகியுள்ளது.

நானோ கார் தயாரிப்பு நிறுத்தப்படுகிறது என்று டாடா நிறுவனத்தால் இன்னும் அதிகாபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நானோ கார் உற்பத்தி ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், டாடா நிறுவனமோ, எதிர்காலத்தில் நானோ கார் தயாரிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், கார்களின் தேவை, தொழில்நுட்பம், செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், 2020ம் ஆண்டு பிஎஸ்-6 வகை இன்ஜின்கள் கார்களில் பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகை இன்ஜின் நானோ காருக்கு பொருந்தாது என்பதால் 2020-ம் ஆண்டில் நானோ கார் தயாரிப்பு நிறுத்தப்படலாம். மேலும் நானோ கார் மீது இன்னும் முதலீடு செய்ய டாடா நிறுவனத்துக்கும் விருப்பமில்லை என்பதால், அடுத்த ஆண்டோடு டாடா நானோ கார் முடிவுக்கு வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் வரை ஒரு நானோ மாடல் கார்கூட தயாரிக்கப்படவில்லை. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட நானோ காரில் ஒரு கார் மட்டும் பிப்ரவரி மாதம் விற்பனையானது. மற்ற மாதங்களில் ஒன்றுகூட விற்கவில்லை என டாடா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தன் டாட்டாவின் கனவு திட்டம் நானோ கார். கடந்த 2008-ம் ஆண்டு ஆட்டோமொபைல் எக்ஸோபில் அனைவரின் கவனத்தையும் டாடா நானோ கார் ஈர்த்தது. ஒரு லட்சத்துக்கு கார் விற்பனை செய்யப்படும் என்ற ரத்தன் டாட்டாவின் அறிவிப்பு பரபரப்பை அதிகப்படுத்தியது.

ஆனால், நானா காரின் செயல்பாட்டில் ஏற்பட்ட சிக்கல்கள், அடுத்தடுத்து வந்த புகார்கள், இன்ஜின்களில் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் நானா கார் விற்பனை சரியத் தொடங்கியது. கடந்த 2018-ம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரை 297 நானோ கார்கள் தயாரிக்கப்பட்டன. 299 கார்கள் விற்பனையாகியுள்ளன

ரத்தன் டாடாவின் கனவுக் காரான நானோ விற்பனை சரியத் தொடங்கியது, உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டது போன்றவை குறித்து ஒருமுறை மிகுந்த வேதனையுடன் டாடா கூறுகையில், "நானோ கார் இந்தியாவின் மலிவான காராக இருக்கும் எனும் விளம்பரம் தான் விற்பனையைக் குறைத்துவிட்டது. அந்தப் பிரச்சாரத்தில் நான் தவறு செய்துவிட்டேன். மக்கள் மலிவான கார்களை விரும்புவதில்லை" எனத் தெரிவித்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x