‘‘குஜராத்தையும், மகாத்மாவையும் உங்களுக்கு  பிடிக்காது’’- ராஜஸ்தான் முதல்வருக்கு ரூபானி பதிலடி

விஜய் ரூபானி - அசோக்கெலோட்
விஜய் ரூபானி - அசோக்கெலோட்
Updated on
1 min read

காந்தி நகர்

குஜராத்தையும், அந்த மாநிலத்தில் பிறந்த மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், பிரதமர் மோடி உள்ளிட்டோரையும் உங்களுக்கு பிடிக்காது, அதனால் தான் எங்கள் மாநிலத்தின் மீது வெறுப்புணர்வை உமிழ்கிறீர்கள் என அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலோட் நேற்று பேட்டியளிக்கையில் ‘‘ ராஜஸ்தானில் மதுபானம் தடை செய்யப்படாது. சட்டவிரோத மதுபானங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தனிப்பட்ட முறையில் மதுபானத்தை தடை செய்வதற்கு ஆதரவாக இருக்கிறேன். ஆனால் மதுவிலக்கு சட்டவிரோத மதுபானத்திற்கு வழிவகுக்கும்.

நான் குஜராத்தில் ஒரு வருடம் இருந்துள்ளேன். நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து மதுவுக்கு அங்கு தடை உள்ளது. ஆனால் பல மாநிலங்க ஒப்பிட்டால் குஜராத்தில் தான் அதிகபட்சம் மதுபானம் குடிப்பவர்கள் உள்ளனர்’’ எனக் கூறியிருந்தார்.
இதற்கு குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘காங்கிரஸ் கட்சிக்கும், அதன் மூத்த தலைவர்களுக்கும் குஜராத்தை பிடிப்பதில்லை. பல ஆண்டுகளாக காங்கிரஸை தோற்டித்து வரும் குஜராத்தை அவர்களுக்கு எப்படி பிடிக்கும்.

இதனால் குஜராத் மாநிலத்தின் மீது அவதூறு கிளப்புகின்றனர். இவர்களுக்கு குஜராத்தையும் பிடிக்காது. அங்கு பிறந்த மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், பிரதமர் மோடி போன்ற தலைவர்களையும் காங்கிரஸ் கட்சியினருக்கு பிடிக்காது’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in