

மும்பை
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் நகரில் பாஜக மாநகராட்சி கவுன்சிலர் குடும்பத்துடன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஜல்கான் நகரில் பூஷவால் பகுதியில் வசித்து வந்தவர் பாஜக கவுன்சிலர் ரவீந்திரா காரத். நேற்று இரவு அவர் தனது வீட்டில் உறவினர்களுன் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று நாட்டு துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் அவரது வீட்டுக்குள் நுழைந்தது.
கவுன்சிலர் காரத் மற்றும் அவரது உறவினர்கள் மீது சரமாரியாக அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் காரத், அவரது சகோதரர் சுனில், மகன் பிரேம் சாகர், ரோஹித் அவர்களது நண்பர் காஜரே ஆகயோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். உடனடியாக அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.
கொலைகளுக்கான காரணம் உடனடியாக வெளியாகவில்லை. இருப்பினும் தனிப்பட்ட விரோதம் காரணமாக இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.