

புதுடெல்லி
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பர்லட் சிங் சாஹ்னி நேற்று ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.
டெல்லியி்ல் சாந்தினி சவுக் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ பர்லட் சிங் சாஹ்னி . இவர் நான்கு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். பர்லட் சிங் சாஹ்னி நேற்று காங்கிரஸில் இருந்து விலகி டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலை யில் ஆம் ஆத்மியில் சேர்ந்தார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு செய்து வரும் வளர்ச்சி திட்டங்களால் ஈர்க்கப்பட்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்ததாக பர்லட் சிங் சாஹ்னி தெரிவித்தார்.
அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகை யில், ‘‘பர்லட் சிங் சாஹ்னி எங்கள் கட்சியில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வழக்கமாக மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் தங்கள் கொள்கைகளை இழந்து விடும். ஆனால், ஆம் ஆத்மி டெல்லி யில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது’’ என்றார்.