பாக். விமானத்தை வீழ்த்தியதற்காக அபிநந்தன் படைப்பிரிவுக்கு விருது 

பாக். விமானத்தை வீழ்த்தியதற்காக அபிநந்தன் படைப்பிரிவுக்கு விருது 
Updated on
1 min read

புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன், இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார். இந்த ஆண்டு ஆரம்பத்தில் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி தீவிரவாத முகாம்களை அழித்தன. கடந்த பிப்ரவரி 27- தேதி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை வீரர் அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார்.

இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பகுதிக்குள் அபிநந்தன் சென்ற விமானம் விழுந்தது. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அபிநந்தன் பின்னர், மத்திய அரசின் முயற்சியால் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து அந்நாட்டின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தன் இடம்பெற்றுள்ள விமானப்படையின் 51-வது படைப்பிரிவை பாராட்டி குழு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா அறிவித்துள்ளார். விமானப்படையின் 87-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நாளை இவ்விருது வழங்கப்படுகிறது. விருதை அபிநந்தன் இடம்பெற்றுள்ள படைப்பிரிவுக்கான குழுவின் கேப்டன் சதீஷ் பவார் பெற்றுக் கொள்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in