

ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
நேர்க்கோடு அமைத்து வாழ்பவர் கள், தங்கள் வாழ்க்கையில் ஏற் படும் எதிர்பாராத நிகழ்வையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என உலகப்புகழ் பெற்ற புத்த துறவியான யோங்கே மிங்கி யூர் ரின்போச்சே தெரிவித்துள்ளார்.
உலகில் அதிகம் விற்பனை யாகும் நூல்களின் எழுத்தாளர் களில் ஒருவர் யோங்கே மிங்கியூர் ரின்போச்சே(44). திபெத்தின் புத்த துறவியான இவர், ‘In Love with the World’ என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியுள்ளார். நேபாளத்தில் பிறந்த இவர், உலகப் புகழ்பெற்ற புத்த துறவியாக உள்ளார்.
புத்த கயாவின் துறவி மடத்தில் தங்கியிருந்த இவர், தனது 36-வது வயதில் அங்கிருந்து வெளி யேறினார். சுமார் நான்கரை ஆண்டு கள் இந்தியாவைச் சுற்றியுள்ளார். அப்போது ஏற்பட்ட அனுபவம் குறித்தும் தனது நூலில் ரின்போச்சே விளக்கியுள்ளார்.
டெல்லியில் பல்லவா லெர்னிங் சிஸ்டம் மற்றும் விக்கிரமசிலா பவுண் டேஷன் அமைப்பின் சார்பில் நடை பெற்ற நிகழ்ச்சியில், ரின்போச்சே தனது நூலை அறிமுகப்படுத்தினார். அப்போது, அவர் பேசியதாவது:
ஒரு மனிதனின் அறியாமை ‘எங்கு உள்ளது?, எப்படி வருகிறது?’ என்பதை புத்தர் அறிந்து கொண் டார். இதுதான் அவருக்கு கிடைத்த முதல் ஞானம். நமக்கு இயற்கை யுடன் ஒன்றி வாழும் வழக்கம் கிடையாது. இதனாலும், நமக்கு அறியாமை ஏற்படுகிறது. உதாரண மாக ஒரு கரையான் புற்றை பார்த்து, நாம் மலை என அஞ்சி விடுகிறோம். ஆனால், இயற் கையை அறிந்தவர்களுக்கு அந்த கறையான் புற்று ஒன்றுமே இல்லை எனப் புரியும்.
ஆழமான தியானத்தில் தொடர் பயிற்சி மற்றும் அனுபவத்தின் மூலம் உலகில் உள்ள மிகப்பெரிய வெற்றிடத்தை உணர்வீர்கள். பிறகு, இயற்கையின் நீரூற்றாக இவ்வுலகில் அன்பு தடையில்லாமல் கிடைக்கும். இந்த இயற்கை ஊற்று மீதான விழிப்புணர்வை பெறும் அறிவு மனிதர்களுக்கு உள்ளது. இந்த திறமை தம்மிடம் இருப்பதை மனிதர்கள் அறியவில்லை. இதை அவர்கள் தியானம் மூலம் அறிந்து விழிப்புணர்வு பெறுவது அவசியம்.
பொதுவாக மனிதர்கள் ஒரு நேர்க்கோட்டை அமைத்து அதன் மீது செல்வதை வழக்கமாக கொள் வது உண்டு. இந்த நேர்க்கோடானது, நிலையானதாகவும், ஒருமுகத் தன்மை கொண்டதாகவும், தானே சிறந்தவர் எனவும் மூன்று வகை யாக அமைகிறது. இந்த நேர்க் கோட்டில் செல்பவர், தான் எதிர் பார்த்தவற்றை பெறும்போது மகிழ் வார். ஆனால், எதிர்பாராதவற்றை பெறும்போது மட்டும் அவருக்கு மிகுந்த கோபம் வரும். எதிர்பாராத நிகழ்வையும் ஏற்க வேண்டும்.
உதாரணமாக, நாம் கழிவறைக்காக வரிசையில் நிற்கும்போது ஒருவர் குறுக்குவழியில் திடீரென வருவார். அவருக்கு என்ன அவசரம்? அல்லது வரிசையை பார்க்காமல் வந்தாரா? எனக் கூட நாம் அறிய விரும்புவதில்லை. இதனால்தான் நமக்கு கோபம் முதலில் வருகிறது. ஆனால், அந்த நபர் குறுக்கே வந்ததன் காரணம், அவரது பார்வையில் சரியாக இருக்கலாம். இதை நாம் புரிந்துகொண்டால் கோபமே வராது. அத்துடன் எதிர்பாராமல் திடீரென குறுக்கே வருபவற்றை நேசிக்கவும் கற்றுக் கொள்ளலாம். இதனால், நமக்கு எப்போதும் கோபம் வராது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரின்போச்சேவின் போதனைகளை பரப்புவதற்காக, அவரது ஆதரவாளர்கள் ‘தி விக்ரமசிலா பவுண்டேஷன் இந்தியா’ என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இதன் கிளைகள் புத்த கயா (பிஹார்), சங்கிசா (உத்தரபிர தேசம்), புதுடெல்லி மற்றும் தர்ம சாலா (இமாச்சலப்பிரதேசம்) ஆகிய 4 இடங்களில் அமைந்துள் ளன. 5-வது கிளையை சென்னை யில் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.