

ஹைதராபாத்,
தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் ஏவியேஷன் அகாடமியில் பயின்றுவந்த இரு பயிற்சி விமானிகள் சென்ற விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறியதாவது:
இன்று காலை பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்தப் பயிற்சி விமானம் விகாராபாத் மாவட்டத்தில் பந்த்வாரம் மண்டலத்தில் விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்திற்கும் விமான நிலையத்திற்குமான தொடர்பு 11.55 மணி அளவில் துண்டிக்கப்பட்டது.
இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரகாஷ் விஷால் மற்றும் ஆமன்ப்ரீத் கவுர் ஆகிய இளம் பயிற்சி விமானிகள் என்று அடையாளங் காணப்பட்டுள்ளது.
12.45 அளவில் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்தபின்னர் உயிரிழந்த பயிற்சி விமானிகளின் சடலங்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இவ்வாறு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-ஏஎன்ஐ