

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸின் நட்சத்திர பிரச்சாரகர்களின் பட்டியலை அந்த கட்சி நேற்று வெளியிட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட 40 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மக்களவை தேர்தலில் சோனியா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியதால் சோனியா காந்தி மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற் றுள்ளார்.