

ஹரியாணா மாநிலம் ஹிசார் அருகேயுள்ள ஹோண்டூர் கிரா மத்தை சேர்ந்தவர் சோனாலி போகத். கணவரை இழந்த இவர் 10 வயது மகளுடன் வசிக் கிறார்.
டிக்டாக் செயலியில் பாலிவுட், பஞ்சாபி, போஜ்புரி பாடல்களுக்கு வாயசைத்து, நடனமாடி வீடி யோக்களை வெளியிட்டு வரும் இவர், ஹரியாணாவில் மிகவும் பிரபலம். ஹரியாணா, பஞ்சாப் மட்டுமின்றி வடமாநிலங்கள் முழு வதும் டிக்டாக் சோனாலிபோகத்தை தெரியாதவர்களே கிடையாது.
ஹரியாணாவில் வரும் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சோனாலி போட்டியிட வேண்டும் என்று அவரது டிக்டாக் ரசிகர்கள் அன்பு கட்டளையிட்டனர். இதை ஏற்று பாஜகவில் அவர் முறைப் படி விண்ணப்பித்தார். இதை யடுத்து ஹரியாணாவின் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட சோனா லிக்கு பாஜக வாய்ப்பு வழங்கி யுள்ளது. அவர் நேற்று முன் தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதுகுறித்து சோனாலி கூறிய தாவது:
டிக் டாக் செயலியில் பிரபல மானதால் பாஜக சார்பில் போட்டி யிட எனக்கு சீட் கிடைத்துள்ளது. சிறு வயது முதலே நான் பாஜகவின் தீவிர ஆதரவாளர். தேர்தல் பிரச் சாரத்துக்கு டிக் டாக் செயலியை பயன்படுத்துவேன். பெண்கள் பாதுகாப்பு குறித்தும் தேசப்பற்று குறித்தும் டிக் டாக்கில் விழிப் புணர்வு பாடல்களை வெளியிடு வேன். தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவேன்.
பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி ஆகியோர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். பாஜக மூத்த தலைவர் சுமித்ரா மகாஜனை எனது அரசியல் குருவாகக் கருதுகிறேன்.
இவ்வாறு சோனாலி போகத் தெரிவித்தார்.
பாஜக வேட்பாளராக போட்டி யிடுவதால் சமூக வலைதளங்களில் அவரது டிக்டாக் பாடல்கள் அதிக மாகப் பகிரப்பட்டு வருகின்றன.
டிக் டாக் மூலம் புகழும் பணமும் சம்பாதிக்கலாம் என்ற நிலையைத் தாண்டி அரசியலிலும் கால் பதிக்க லாம் என்பதை சோனாலி போகத் நிரூபித்துள்ளார்.