Published : 05 Oct 2019 04:01 PM
Last Updated : 05 Oct 2019 04:01 PM

''எங்கே போலி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்?'' - பாஜக, சிவசேனாவை சாடும் எதிர்க்கட்சிகள் 

மும்பை,

மும்பை ஆரே காலனியில் மரங்களைக் காப்பாற்ற ஆளும் கட்சிகள் தவறிவிட்டதாக மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியான தேசியவாதக் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை சிவசேனா மற்றும் பாஜகவை விமர்சித்து வருகின்றன.

மும்பையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆரே காலனி பகுதியில் உள்ள 2,600 மரங்களை வெட்டக்கூடாது என தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆர்வலர்கள் தாக்கல் செய்திருந்த 4 மனுக்களை நேற்று மாலை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் , மரங்கள் அடர்ந்த ஆரே காலனி ஒரு வனப்பகுதி அல்ல எனவும் நீதிமன்றம் கூறியது. இதனை அடுத்து வெள்ளிக்கிழமை இரவு ஆரோ காலனியில் நுழைந்த புல்டவுசர்கள் மரங்களை வெட்டும் பணிகளைத் தொடங்கின.

மரங்கள் வெட்டப்படுவதாகத் தகவல் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த ஆரே காலனி மக்கள் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 38 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

தேசியவாத காங்கிரஸ் கேள்வி

தேசியவாத காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் நவாம் மாலிக் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

"ஆரே மரம் வெட்டுவது மும்பைவாசிகளை கையறு நிலைக்குக் கொண்டு செல்வது தவிர வேறொன்றுமில்லை. கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா கடும் சிக்கலில் இருந்தது. ஆனால் இப்போது, இது பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளது.

பிளாஸ்டிக் மீதான தடையைக் கொண்டுவந்த போலி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆரேயில் மரம் வெட்டுதல் தொடங்கியபோது, எங்கே போனார்கள்?" என்று கேட்டு தாக்கரே மற்றும் பாஜகவை டாக் செய்து மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு தேசியவாதக் கட்சித் தலைவரான தனஞ்சய் முண்டே, மரங்களை வெட்ட கண்டனம் செய்ததோடு, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களின் குரல்களை மாநில அரசு நசுக்குவதாக குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் விமர்சனம்

மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் மரங்களை காப்பாற்றுவதை விட பாஜகவுடனான கூட்டணி முக்கியமானதுதானா என்று சிவசேனாவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

"இது சிவசேனா காலம். நீங்கள் அரசாங்கத்தில் இருக்கிறீர்கள், இதை தடுத்து நிறுத்த முடியும். உங்களுக்கு முக்கியமானது எது? மெகா கூட்டணியா? அல்லது மரங்களின் மெகா மரங்களின் இழப்பா?

அக்டோபர் 21 சட்டப்பேரவை தேர்தலில் தாக்கரே போட்டியிடும் வொர்லியில் கெம் சோ வொர்லி (எப்படி இருக்கிறாய் வொர்லி) என்று குஜராத்தில் கேட்பதுபோல பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இப்படி பேனர் வைப்பதற்கு பதிலாக குறைந்த பட்சம் "கெம் சோ #AareyForest" என்று கேட்டு தாக்கரே பேனர் வைத்திருக்கலாம்.
இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் தெரிவித்துள்ளார்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x