Published : 04 Oct 2019 06:14 PM
Last Updated : 04 Oct 2019 06:14 PM

உ.பி. சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ: விளக்கம் கேட்டு காங்கிரஸ் நோட்டீஸ்

லக்னோ

பிரியங்கா காந்தி நடத்திய பேரணியை புறக்கணித்து உத்தர பிரதேச சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங்கிற்கு விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தில் கட்சியினருடன் பாதயாத்திரை மேற்கொண்டார். அந்த சமயத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், 36 மணி நேர சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தினார்.

ஆனால் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தன. ஆனால் இந்த கூட்டத்தில் சோனியா காந்தியின் ரேபரேலி மக்களவை தொகுதிக்குட்பட்ட ரேரேலி சட்டப்பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் பங்கேற்றார்.

காங்கிரஸ் பேரணியில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டு யோகி ஆதித்யநாத்தின் அழைப்பின் பேரில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிதி சிங் கலந்துகொண்டது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.

ஆனால் தொகுதி வளர்ச்சியை கருத்தில் கொண்டே சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றதாக அதிதி சிங் தெரிவித்தார். இந்தநிலையில் அதிதி சிங்கிற்கு விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து 2 நாட்களுக்குள் தக்க பதிலளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x