Published : 04 Oct 2019 01:12 PM
Last Updated : 04 Oct 2019 01:12 PM

''பழங்குடிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்'' - குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம்

மணிப்பூரில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் டுபட்டனர். | படம்: ஏஎன்ஐ

இம்பால்,

மணிப்பூர் மாநிலம் முழுவதும் குடியுரிமை திருத்த மசோதா கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மக்கள் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து மலை மாவட்டங்களின் கடைவீதிகளில் நேற்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆறு முன்னணி மாணவர் அமைப்புகள் கலந்துகொண்டு குடியுரமை திருத்த மசோதாவுக்கு (சிஏபி-சிட்டிஸன்ஷிப் அமன்மெண்ட்) எதிராக வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

போராட்டத்தின்போது முதலில் மனித சங்கிலி நடைபெற்றது. அதன் பின்னர் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிரான கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.

"வடகிழக்கில் சிஏபி செயல்படுத்தக்கூடாது'', ''மணிப்பூரில் சிஏபி அமல்படுத்தக்கூடாது", ''சிஏபி பழங்குடி மக்களுக்கு ஓர் அச்சுறுத்தல்'' "மணிப்பூரின் பழங்குடி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்", " நீடு வாழ்க மணிப்பூர் '' போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன..

போராட்டத்தினர் 'வடகிழக்கில் சிஏபி வேண்டாம்.' மற்றும் 'நிபந்தனையின்றி சிஏபியை திரும்பப் பெறுங்கள்' என்று எழுதிவைத்த பலகைகளை ஏந்திவந்தனர்.

பல்வேறு சிவில் அமைப்புகளை உள்ளடக்கிய குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிரான மணிப்பூர் மக்கள் போராட்டக்குழு (மான்பாக்) ஒருங்கிணைப்பாளரான யாம்னாச்சா திலீப் போராட்டம் பற்றி கூறியதாவது:

''மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மோடி அரசிடம் மக்கள் விழிப்புடன் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கவுகாத்தியில் சமீபத்தில் நடைபெற்ற வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி (நெடா) கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.

2016 ஜனவரி 8 ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த மசோதாவின்படி டிசம்பர் 31, 2014 க்கு முன்பு இந்தியாவுக்கு வந்த வங்கதேச, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரியில், சிஆர்பிசியின் 144-வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் குடியுரிமை (திருத்த) மசோதா, 2016 ஐ மாநிலங்களவையில் வழங்குவதற்கு முன்னதாக விதிக்கப்பட்டன. இருப்பினும், மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

இந்தக் குடியுரிமை திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டால், வடகிழக்கு பழங்குடி மக்களின் இருப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’’.

இவ்வாறு போராட்டக்குழு தலைவர் யாம்னாச்சா திலீப் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x