இந்தியத் தொழில் முனைவோர்கள் வங்கதேசத்தில் முதலீடு செய்ய வேண்டும்: ஷேக் ஹசினா

இந்தியத் தொழில் முனைவோர்கள் வங்கதேசத்தில் முதலீடு செய்ய வேண்டும்: ஷேக் ஹசினா
Updated on
1 min read

இந்தியத் தொழில் முனைவோர்கள் வங்கதேசத்தில் முதலீடுசெய்ய வேண்டும் என்று அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியா - வங்கதேசம் இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினா நான்கு நாள் சுற்றுப் பயணமாக வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து முதல் நிகழ்வாக புதுடெல்லியில் உலகப் பொருளாதார மையம் சார்பாக நடைபெற்ற இந்தியப் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்திருனராகப் பங்கேற்றார்.

டெல்லியில் நடந்த பொருளாதார மாநாட்டில் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினா பேசும்போது, “இந்தியா - வங்கதேச இரு தரப்பு உறவில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் நான் இங்கு ஆலோசிக்க வந்திருப்பது பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றியது. உலகளாவிய தொழில் முனைவோர்கள் குறிப்பாக இந்தியத் தொழில் முனைவோர்கள் கல்வி, ஒளி பொறியியல், மின்னணுவியல், வாகனத் தொழில் துறை போன்றவற்றில் வங்கதேசத்தில் முதலீடு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், சனிக்கிழமை இந்தியப் பிரதமர் மோடியுடன் நடைபெறும் சந்திப்பில் பல்வேறு துறைகள் சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாகவும் ஷேக் ஹசினா தெரிவித்தார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் நீர் பங்கீடு, முதலீடு, தகவல் தொழில்நுட்பம் உட்பட பல துறைகள் சார்ந்து ஆலோசனைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பொதுத் தேர்தலுக்கு பின்னர் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினா மேற்கொள்ளும் முதல் இந்தியச் சுற்றுப் பயணம் இதுவாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in