

ஸ்ரீநகர்
காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக விடுவிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு தெரிவித் துள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து, அங்கு கடுமை யான கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதி யாக, பிரிவினைவாத அமைப்பு களின் தலைவர்கள் நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர்.
அதுமட்டுமின்றி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரது மகனும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி உட்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், காஷ்மீரில் சட்டம் - ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதை கருத்தில் கொண்டு, அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப் பாடுகளை காஷ்மீர் அரசு படிப் படியாக நீக்கியது. அதன்படி, தற்போது மாநிலத்தில் பெரும்பா லான பகுதிகளில் எந்தவித கட்டுப் பாடுகளும் அமலில் இல்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, காஷ்மீரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.
இந்தச் சூழலில், காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ள அரசியல் கட்சித் தலை வர்கள் ஒருவர் பின் ஒருவராக விடுவிக்கப்படுவார்கள் என அம் மாநில ஆளுநரின் ஆலோசகரான பரூக் கான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் 300 பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களை விடுவிக்க அரசு முடிவு செய் துள்ளதாக அவர் கூறினார்.