

இரா.வினோத்
பெங்களூரு
வங்க தேசத்தை சேர்ந்த லட்சக் கணக்கானவர்கள் கர்நாடகாவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள தாகவும், அவர்களை வெளியேற்றும் விதமாக குடிமக்கள் அடை யாள அட்டையை அறிமுகப்படுத்த வேண்டும் என அசோக், பிரதாப் சிம்ஹா உள்ளிட்ட பாஜக தலைவர் கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், முதல்வர் எடியூரப்பா தலைமையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்ததும், மாநி லத்தில் சட்ட விரோதமாக தங்கி யுள்ள வங்கதேசத்தை சேர்ந்தவர் களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய முடிவெடுக்கப் படும் என எடியூரப்பா தெரிவித் திருந்தார். இந்நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று ஹாவேரியில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
கர்நாடகாவில் அடிப்படை கட்ட மைப்பு வசதி, வேலைவாய்ப்பு, சீரான தட்பவெப்ப நிலை ஆகிய வற்றின் காரணமாக பல பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கு வந்து வாழ்கின்றனர். சட்ட விரோத குடி யேற்றங்களால் பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதனைத் தடுக்கும் வகையில், அசாமில் மத்திய அரசு அறிமுகப் படுத்தியுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் (என்.ஆர்.சி) திட்டத்தை கர்நாடகாவிலும் அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளோம்.
இந்த விவகாரம் தொடர்பாக ஹாவேரியில் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தேசிய குடிமக் கள் பதிவேடு நடைமுறையை அமல்படுத்துவது குறித்து விரை வில் ஆலோசனை நடத்தி ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.