திருப்பதி பிரம்மோற்சவத்தில் இன்று கருட சேவை

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று மலையப்ப சுவாமி, கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று மலையப்ப சுவாமி, கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Updated on
1 min read

என். மகேஷ்குமார்

திருமலை 

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று இரவு கருடசேவை நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவரான மலையப்ப சுவாமி வெவ்வேறு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக் கிறார். நேற்று காலை கற்பக விருட்ச வாகனத்திலும் இரவு சர்வபூபாள வாகனத்திலும் உற் சவர் எழுந்தருளினார்.

விழாவின் 5-ம் நாளான இன்று காலை மோகினி அவதாரத்திலும் இரவு கருடவாகனத்திலும் உற்சவர் எழுந்தருள உள்ளார்.

இதையொட்டி வில்லிப்புத் தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலை மற்றும் கிளிகள் நேற்று திருமலையை வந் தடைந்தன. இதுபோல் சென்னை யில் இருந்து புறப்பட்ட திருக்குடை களும் நேற்று மாலை திருமலைக்கு வந்து சேர்ந்தன.

கருடசேவைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை யொட்டி திருப்பதி எஸ்.பி. அன்பு ராஜன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. இன்றுகாலை 7.30 மணியி லிருந்து இரவு 1.30 மணி வரை 3 லட்சம் பேருக்கு அன்னதான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை இடையே நேற்று இரவு 11 மணியில் இருந்து நாளை 5-ம் தேதி காலை 8 மணி வரை மோட்டார் பைக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாட வீதிகளில் 2 லட்சம் பக்தர் கள் அமர்ந்து வாகன சேவையை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள பக்தர்களுக்கு இலவச சிற் றுண்டி, காபி, டீ, பால், மோர், உணவுப் பொட்டலங்கள் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ள தாக அன்னதான கேன்டீன் சிறப்பு அதிகாரி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in