Last Updated : 03 Oct, 2019 05:44 PM

 

Published : 03 Oct 2019 05:44 PM
Last Updated : 03 Oct 2019 05:44 PM

கணிப்பை விட அதிக மழை: இந்திய வானிலை ஆய்வு மைய ஆய்வு முறை சரியானதுதானா?- நிபுணர்கள் கூறுவது என்ன?

கடந்த 25 ஆண்டுகளின் அதிக பருவ மழை இந்தியாவில் பதிவாகியுள்ள நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 10 ஆண்டுகளாகக் கையாண்ட புதிய ஆய்வு முறையைக் காட்டிலும் பழைய ஆய்வு முறை இன்னும் கூட துல்லியமாகக் கணிப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் பருவமழை 10% அதிகமாகப் பெய்துள்ளது. ஆனால் இந்திய வானிலை ஆய்வுமையத்தின் Monsoon Mission Coupled Forecast Model(CFS), என்ற ஆய்வு மாதிரி இது குறித்து துல்லியமாகக் கணித்து முன்னெச்சரிக்கை விடுக்க முடியவில்லை. ஐ.எம்.டியின் புள்ளிவிவர மாதிரிகள் தனது கடைசி ஆகஸ்ட் 1ம் தேதி முன் அறிவிப்பில் ஜூன் - செப்டம்பர் மாதங்களில் 96% பருவ மழை பெய்யும் என்று கணித்தது. சி.எஃப்.எஸ். மாதிரியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தெரிவிக்கப்பட்ட போது பருவ மழை 94% என்று கூறி பிறகு ஆகஸ்ட்டில் 99% என்று புதுப்பிக்கப்பட்டது.

குறுகிய காலக் கணிப்பில் துல்லியம்:

நீண்ட கால பருவ மழை முன்னறிவிப்பில் கொஞ்சம் முன்பின் இருந்தாலும் குறுகிய கால மழைக்கணிப்பில் ஐ.எம்.டி. துல்லியம் காட்டியுள்ளது. 2 வாரங்களுக்கான கணிப்பில் பருவ மழை அதிகரிக்கும் என்று தெரிவித்தது. ஆனால் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கணிப்புகளை தனது இந்தியா முழுதுக்குமான பருவ மழைக் கணிப்பில் பயன்படுத்தவில்லை. புதிய கணிப்பு மாதிரிகள் ரூ.1200 கோடி மான்சூன் மிஷன் என்ற திட்டத்தின் ஒரு அங்கமாகும். பணிகள் நடைபெற்று வரும் இந்தத் திட்டத்தில் குறுகிய கால நீண்ட கால கணிப்புகள் மேலும் துல்லியமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சி.எஃப்.எஸ். மாதிரியில் 2012 முதல் பருவமழைக் கணிப்பு பற்றி தி இந்து (ஆங்கிலம்) ஆய்வு செய்த போது 2013, 2015 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் சி.எஃப்.எஸ். மாதிரி மூலம் பருவ மழை சரியாகக் கணிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. 104% மற்றும் 86% என்று கணித்தது, 106%, 86% மழை பதிவாகி துல்லியக் கணிப்பை உறுதி செய்தது. இந்தப் புதிய சி.எஃப்.எஸ். மாதிரி போலவே பழைய ஆய்வு மாதிரியும் கணிப்பு உத்தியும் 2015-ஐ சரியாகக் கணித்தது. இந்த ஆண்டு இந்தியா கடும் வறட்சியைச் சந்தித்தது. அதே போல் 2017-ல் பழைய கணிப்பு மாதிரி 98% மழை என்றது 95% பதிவானது, ஆனால் சிஎஃப்எஸ் மாதிரி 100% மழை எனக் கணித்தது.

ஐ.எம்.டி. தன் ஆகஸ்ட்டின் புதுப்பித்த கணிப்பை ஆகஸ்ட், செப்டம்பர் மழை அளவில் புதுப்பித்து பிரதிபலிக்காதது குறித்து தனித்த விஞ்ஞானிகள் சிலர் ஆச்சரியமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக புனேயில் உள்ள, இந்திய ட்ராப்பிக்கல் வானிலை ஆய்வு மையத்தின் எஸ்.என்.கிருஷ்ணா தெரிவிக்கும் போது, “ஜூலை மாத மத்தியில் மழை அளவை தீர்மானிக்கும் இந்திய பெருங்கடல் மேற்பரப்பு வெப்ப அளவு மாற்றங்கள் என்ற ஓஷன் டைபோல் சாதகமான சூழ்நிலையை தெரிவித்தது. இதுதான் அடுத்தடுத்த வாரங்களில் வலுவடைந்தது, இதுதான் ஆகஸ்ட், செப்டம்பர் கனமழைக்குக் காரணமாக அமைந்தது. எனவே அதிமழை உள்ளது என்று எச்சரிக்காதது ஆச்சரியமாகவே உள்ளது” என்றார்.

ஆகஸ்ட் 1ம் தேதி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மழை 100% என்று கூறியது, இதில் கூடக் குறைச்சலாக 8% முன் பின் இருக்கும் வாய்ப்பை எடுத்துக் கொண்டு பார்த்தாலே கூட கணிப்புக்கும் பெய்த மழை அளவுக்கும் பொருந்தவில்லை, கணிப்பு 100% ஆக இருக்கும் போது, 130% மழை பெய்துள்ளது, 1983-க்குப் பிறகு இது அதிக மழை அளவாகும்.

பெங்களூருவில் உள்ள இந்தியா அறிவியல் கழகம், ஹைதராபாத்தில் உள்ள இன்காய்ஸ் ஆகியவை ஆகஸ்ட், செப்டம்பர் மழை இயல்புக்கும் கூடுதலாக இருக்கும் என்று தெரிவித்தது, அதாவது ஆகஸ்ட் 10ம் தேதி கணிப்பை முன்வைத்துக் கூறியிருந்தது. கிழக்குப் பசிபிக் எல்னினோ விளைவு மந்தமடைந்திருந்தாலும் இந்தியப் பெருங்கடலில் அதற்கு ஈடுகட்டும் விதமாக சூழ்நிலை இருந்ததால் மழை வற்றாததோடு இயல்புக்கும் கூடுதலாகப் பெய்ததாக 'கரண்ட் சயன்ஸ்’ என்ற இதழில் செப்.10ம் தேதி கட்டுரை வெளியானது.

ஐஎம்டி விஞ்ஞானிகள் இது குறித்து கூறும்போது, இயங்கியல் பருவ மழை ஆய்வு மாதிரிகள் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஓரிரு மாதங்களுக்கு முன்பாகக் கணிக்க முடியாதவையாக உள்ளன என்று ஒப்புக் கொண்டனர். அதாவது எல்னினோ விளைவுகள் சுமார் 18 மாதகால சுழற்சி கொண்டது, ஆனால் இந்தியப் பெருங்கடல் வெப்ப அளவு மாற்றங்கள் திடீரென ஏற்படுவது, என்று விளக்கம் அளித்தார் ஐ.எம்.டியின் பருவநிலைக் கணிப்பு பிரிவு தலைவர் டி.எஸ். பய்.

ஆகவே செப்டம்பரில் பெய்த அதிக மழைக்குக் காரணம் திடீரென ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால்தான். இதனை சில நாட்களுக்கு முன்பாகக் கணிக்கலாமே தவிர முன் கூட்டியே நீண்ட காலத்துக்கு முன்பு கணிக்க முடியாது என்கிறார் பய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x