

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சர்வதேச கடல் எல்லை யில் மர்ம படகு ஒன்று இந்திய எல்லை நோக்கி முன்னேறுவதாக உளவுத் துறை தகவல் தெரிவித் தது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கடலோர காவல் படை யின் ரோந்து விமானம் படகை கண்டுபிடித்தது.
சம்பவ இடத்துக்கு ரோந்து கப்பல்களில் விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் மர்ம படகை சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் பாகிஸ்தான், ஈரான் நாடுகளைச் சேர்ந்த 12 பேர் இருந்தனர். அதிநவீன செயற்கைக்கோள் தொலைபேசி களை வைத்திருந்த அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிடிபட்ட 12 பேரும் விழிஞ்சம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு தீவிர விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. ‘ரா’ உளவுத் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் தங் களை மீனவர்கள் என்று தெரிவித் துள்ளனர். ஆனால் அவர்களின் வாக்குமூலம் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.
கடந்த 2008 நவம்பரில் மும்பை யில் கடல்மார்க்கமாக நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி 166 பேரை கொலை செய்த னர். எனவே தற்போதைய சம்ப வத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று மத்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.