

புதுடெல்லி
காந்தி ஜெயந்தியையொட்டி அமெரிக்காவின் முன்னணி நாளிதழான ‘நியூயார்க் டைம்ஸின்' தலையங்கப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு கட்டுரை எழுதியுள்ளார். ‘இந்தியாவுக்கும் உலகுக்கும் காந்தி ஏன் தேவைப் படுகிறார்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை நேற்று வெளியானது. அதில் அவர் கூறி யிருப்பதாவது:
மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியில் அமெரிக்கா வில் கருப்பின மக்களின் உரிமைக் காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங் கடந்த 1959-ம் ஆண்டில் இந்தியா வந்தார். அப்போது அவர் கூறியபோது, ‘மற்ற நாடுகளுக்கு செல்லும்போது சாதாரண சுற்றுலாப் பயணியாக செல்கிறேன். ஆனால் இந்தியாவில் ஒரு பக்தனாக புனித யாத்திரை மேற்கொள்கிறேன்' என்று கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, “அஹிம்சையின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற தத்துவத்தை உலகுக்கு வழங்கிய பூமி இந்தியா. அமெரிக் காவின் அலபாமா மாகாணம், மண்ட்கோமரி மற்றும் அமெரிக்கா வின் தெற்குப் பகுதியில் கருப்பின மக்கள், காந்தியின் அஹிம்சை வழியில் போராடி, வெற்றி கண்டனர்” என்று தெரிவித்தார்.
மார்ட்டின் லூதர் கிங்கின் கலங்கரைவிளக்கமாக, வழிகாட்டி யாக விளங்கியவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மகாத்மா காந்தி. அவரால் ஈர்க்கப்பட்டே இந்தியாவுக்கு கிங் வந்தார். இன்றைய தினம் மகாத்மா காந்தி யின் 150-வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். இன்றும் உலகின் லட்சக்கணக்கான மக்களுக்கு காந்தி தைரியம் ஊட்டுகிறார்.
காந்தி குறித்து தென்னாப்பிரிக்க சுதந்திரப் போராட்டத் தலைவர் நெல்சன் மண்டேலா கூறும்போது, “காந்தி ஒரு புனித போர் வீரர்” என்று புகழாரம் சூட்டினார். அவர் மேலும் கூறும்போது, “நம்மை அடக்கி ஆள்பவர்களுக்கு இணங்கி ஒத்துழைத்தால் அவர்கள் நம் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். அவர்களுக்கு ஒத்துழைக்காமல், அஹிம்சை வழியில் எதிர்த்தால் எதுவும் செய்ய முடியாது. தென்னாப்பிரிக்காவில் காலனி ஆதிக்க, வெள்ளையின ஆதிக்கத் துக்கு எதிரான அஹிம்சை போராட் டத்துக்கு காந்திதான் உந்துதலாக இருந்தார்” என்று கூறினார்.
மிகச் சிறிய பொருட்களை, மிகப்பெரிய அரசியலுக்கு காந்தி பயன்படுத்தினார். சிறிய கை ராட்டை மூலம் சுயசார்பு, கூட்டுச் செயல்பாடு, தேச முன்னேற்றத்தை அவர் முன்னெடுத்துச் சென்றார். இது வேறு யாரால் முடியும்?
காலனி ஆதிக்கத்தின்போது இந்திய உப்புக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து காந்தி போராட்டத்தில் குதித்தார். கடந்த 1930-ம் ஆண்டு தண்டி யாத்திரையின் மூலம் உப்பு சட்டத் துக்கு அவர் சவால் விடுத்தார். அரபிக் கடற்கரையில் அவர் அள்ளிய ஒரு கைப்பிடி உப்பு, மிகப்பெரிய சத்தியாகிரகப் போராட் டத்துக்கு வித்திட்டது.
தனிநபரின் உரிமை குறித்து உலகம் பேசியபோது, தனிநபரின் கடமை குறித்து காந்தி பேசினார். யங் இந்தியாவில் அவர் எழுதிய கட்டுரையில், “கடமைகளை செய் வதுதான், உரிமையின் ஆதாரம். நாம் நமது கடமையை செய்ய மறந்தால் உரிமைகள் தொலைதூர மாகிவிடும். ஒருவர் தனது கடமை களை செய்தால் உரிமைகள் தானாக வந்து சேரும்” என்று தெரிவித்தார். ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தி சமூக ஏற்றத்தாழ்வை நீக்க வேண்டும். நாம் வாழும் பூமியை போற்றிப் பாதுகாக்க வேண்டும். தாவரங்கள், விலங்கினங்களையும் காக்க வேண்டும் என்று காந்தி அறிவுறுத்தினார்.
உலகின் மிகச் சிறந்த ஆசான் காந்தி. எல்லா பிரச்சினைகளுக்கும் அவர் எளிய தீர்வை கூறியிருக் கிறார். அவரது வழியில் இந்தியா தீர்க்கமாக, திடமாக செயல்பட்டு வருகிறது. இதன்காரணமாக வறுமையை வேகமாக ஒழித்து வரும் நாடுகளில் இந்தியா முன் னிலையில் உள்ளது. இந்தியாவின் சுகாதார திட்டங்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா முன்னோடியாக திகழ் கிறது. சர்வதேச சூரிய மின் உற்பத்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியா, சர்வதேச அளவில் பல்வேறு அரும்பணி களை ஆற்றி வருகிறது. உலகத்துக்காக இன்னும் கொடுக்க வேண்டும், உழைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதிபூண்டு செயல்படுகிறோம்.
மகாத்மா காந்தி குறித்து உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் கூறும்போது, “இப்படி ஒரு மனிதர், ரத்தமும் சதையுமாக பூமியில் வாழ்ந்தார் என்பதை வருங்கால சந்ததியினர் நம்ப மறுப்பார்கள்” என்று கூறினார். காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நேரத்தில் உலக மக்கள் முன்பு ‘ஐன்ஸ்டீன் சவாலை' முன்வைக்கிறேன்.
காந்தியின் கொள்கைகளை வருங்கால தலைமுறையினருக்கு நாம் எப்படி எடுத்துச் செல்வது? சர்வதேச சிந்தனையாளர்கள், தொழிலதிபர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் முன்களத்தில் இருந்து காந்தியின் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்.
வெறுப்பு, வன்முறை அற்ற வளமான, அமைதியான உலகை உருவாக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் தோளோடு தோள் நின்று பணியாற்ற வேண் டும். அப்போதுதான் காந்தியின் கனவை, நனவாக்க முடியும். காந்தியின் விருப்பமான பாடல் ‘வைஷ்ணவ ஜன தோ'. “அடுத்தவர் களின் வலியை உணர்ந்து, அவர் களின் துன்பத்தை துடைப்பவனே உண்மையான மனிதன்” என்பது இந்த பாடலின் அர்த்தம். தன்னிக ரற்ற தலைவரான மகாத்மா காந்திக்கு முன்பாக உலகம் தலைவணங்குகிறது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.