

புதுடெல்லி
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது கனவுகளை நனவாக்குவோம் என்று பிரதமர் மோடி உறுதி வழங்கினார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியிலுள்ள காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் நேற்று காலை குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்த், குடி யரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன் னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத் வானி, மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், ஹர்தீப் சிங் புரி, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள் ளிட்டோரும் மலர் தூவி மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் கூறும்போது, “காந்தியின் கனவுகளை நனவாக்க வும், நமது பூமியை இன்னும் சிறந்த தாக மாற்றுவதற்கும் தொடர்ந்து கடினமாக உழைப்போம் என்று உறுதியளிக்கிறோம்” என்றார். மேலும் ட்விட்டரில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவில், “அமைதி, அஹிம்சை தொடர்பான மகாத்மா காந்தியின் போதனைகள் இன்றளவும் உலகுக்கு பொருத்த மாக உள்ளன. அவற்றை நாம் போற்றி பின்பற்றவேண்டும்” என்று கூறியுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ட்விட்டரில் கூறும்போது, “நமது அன்றாட வாழ்க்கையில் காந்திய கொள்கை களை உள்வாங்கி செயல்படுத்து வதன் மூலம் நம் வாழ்க்கையை மாற்ற முயற்சிக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்றக் கட்டிடத்தின் மத்திய அரங்கில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச் சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
திறந்தவெளி கழிப்பிடம்
மாலையில் குஜராத் மாநிலம் அகமதாபாதிலுள்ள சபர்மதி ஆசிரமத்தில் நடைபெற்ற காந்தி பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது இந்தியா திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நாடாக மாறியுள்ளது என்று அவர் அறிவித் தார். மேலும் காந்தி 150-வது பிறந்த நாள் சிறப்பு அஞ்சல் தலை, ரூ.150 சிறப்பு நாணயம் ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசும்போது, “திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியா மாறியதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை நாம் ஈர்த்துள்ளோம். தூய்மை இந்தியா திட்டத்தைப் பாராட்டி பல்வேறு நாடுகள் நமக்கு விருதை அளித்து வருகின்றன.
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க் கும் திட்டத்தையும் நாம் வெற்றிகர மாக நிறைவேற்றவேண்டும்” என்றார். - பிடிஐ