டெல்லியில் மோடிக்காக சிறப்பு சுரங்கப்பாதை: ரேஸ்கோர்ஸ் முதல் சப்தர்ஜங் விமான நிலையம் வரை அமைகிறது

டெல்லியில் மோடிக்காக சிறப்பு சுரங்கப்பாதை: ரேஸ்கோர்ஸ் முதல் சப்தர்ஜங் விமான நிலையம் வரை அமைகிறது
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி தனது ரேஸ்கோர்ஸ் வீட்டிலிருந்து சப்தர்ஜங் விமான நிலையம் செல்வதற்காக தனியாக ஒரு சிறப்பு சுரங்கபாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, தனது வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள இடங் கள் மற்றும் டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்காக ஹெலி காப்டரில் பயணம் செய்து வந்தார்.

இதனால், போக்குவரத்து, பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்பட்டது. இதைத் தவிர்ப்பதற்காக 2010-ல் ரேஸ்கோர்சில் உள்ள பிரதமரின் வீட்டிலிருந்து சப்தர்ஜங் விமான நிலையம் வரை சிறப்பு சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

எனினும், இதன்மூலம் சர்ச்சைகள் எழலாம் என்று கருதி கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டம் மோடியால் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் மத்திய உளவுத்துறையினரின் மேற்பார்வை யில் செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ‘‘அடுத்த பிரதமராக ராகுல் காந்தி வருவார் எனக் கருதி மன்மோகன் சிங் பெயரால் இந்த பாதை திட்டமிடப்பட்டது. இவர்களைவிட மோடிக்கு தீவிரவாத மிரட்டல்கள் அதிகம்.

எனவே, இந்த சிறப்பு சுரங்கப்பாதை யால் அவரது பாதுகாப்பு தொடர்பான சிக்கல் குறையும். இதை முதலில் ஏற்க மறுத்த பிரதமர், பிறகு பல நாடுகளிலும் இதுபோல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறியவுடன் சம்மதித்தார்’’ என்றனர்.

இதை டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் துறையினர் அமைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று அரசு கருதுவதா கவும், இதற்காக மத்திய பொதுப் பணித்துறையினர் அவர்களிடம் அப்பணியை ஒப்படைக்க இருப்ப தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்ப ரேஷன் மக்கள் தொடர்பு அதிகாரி அனுஜ் தயாள் கூறுகையில், ‘‘நீங்கள் கூறுவது போல் எந்த திட்டமும் இருப்பதாக எனது கவனத்தில் இல்லை. இந்த சுரங்கப்பாதை பணியை நாங்கள்தான் மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. இதை செயல்படுத்துவதற்கு மத்திய அரசில் வேறு சில துறைகளும் உள்ளன’’ என்றார்.

ரேஸ்கோர்சின் எண் 7-ல் உள்ள பிரதமர் அரசு இல்லத்திலும் ஒரு ஹெலிகாப்டர் தளம் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், இது அவ்வள வாகப் பயன்படுத்தப் படுவதில்லை. இங்கிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள விவிஐபிக் களுக்கான சப்தர்ஜங் விமான நிலையம் அல்லது நேரடியாக இந்திர காந்தி விமான நிலையம் சென்றே பிரதமர் விமானப் பயணம் செய்து வந்தார்.

இந்த சுரங்கப்பாதை பிரதமர் இல்லத்திலிருந்து கேமல் அத்தார்த் மார்க் வழியாக சப்தர் ஜங் சாலையில் சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைக்கப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in