Published : 02 Oct 2019 08:23 AM
Last Updated : 02 Oct 2019 08:23 AM

திருப்பதி கோயில் பிரம்மோற்சவம்: ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் மரியாதை; முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கினார்

என்.மகேஷ்குமார்

திருமலை 

திருப்பதி ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தின் போது அரசு சார்பில் மரியாதை வழங்குவது ஐதீகம். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று ஏழுமலையானுக்கு காணிக் கையாக அளித்தார்.

திருப்பதி ஏழுமலையானுக்கு அரசர்கள் காலம் முதலே பல மன்னர்கள் காணிக்கை வழியாக வும், சேவைகள் புரிந்தும் மரியாதை செலுத்தி வந்துள்ளனர் என்பது அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.

பல்லவர்கள், சேரர்கள், சோழர்கள், விஜய நகர பேரரசர்கள், சாளுக்கிய மன்னர்கள் என மன்னர் குலத் தோர் சுவாமிக்கு சர்க்கார் கைங் கர்யங்களைச் செய்துள்ளனர். தொண்டமான் சக்கரவர்த்தி காலத்தில்தான் இக்கோயில் கட்ட தொடங்கப்பட்டு, படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. அதன் பின்னர் பல குறு மன்னர்கள், அரசர்கள், சக்கரவர்த்திகள் சுவாமியை வழி பட்டு தங்களது சர்க்கார் மரியா தையை அளித்துள்ளனர். விஜய நகர பேரரசனான கிருஷ்ண தேவராயர் காலமே திருமலை கோயில் பெரும் வளர்ச்சி அடைந்த பொற்காலம் என கூறலாம். இவர் மொத்தம் 7 முறை படியேறி பெருமாளை தரிசனம் செய்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. போரில் வென்றபோதெல்லாம் இவர் ஏழுமலையானை தரிசித்து, பல வகையான தங்க ஆபரணங் களை ஏழுமலையானுக்கு காணிக் கையாக வழங்கி உள்ளார். மேலும் இவர் கனகாபிஷேகமும் (தங்க காசு அபிஷேகம்) செய்ததாக செப் பேடுகள் மூலம் தெரியவருகிறது.

இப்படியாக, அரசர் காலம் முதல் தொடங்கி, அதன் பிறகு நவாப்கள், சுல்தான்கள், மஹந்திக்கள் என காலம் மாறினாலும் ஏழுமலையா னுக்கு அரசு மரியாதை செய்வது எக்காலத்திலும் நிறுத்தப்பட வில்லை. இது இப்போதும் தொடர் கிறது. ஆந்திர அரசு சார்பில் ஒவ் வொரு ஆண்டும் பிரம்மோற்சவத் தின்போது ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்கப்பட்டு வருகிறது. முன்பெல் லாம் கருட சேவையன்று பட்டு வஸ் திரம் காணிக்கையாக வழங்கப் பட்டது. ஆனால், சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, அவர் மீது அலிபிரி மலைப்பாதையில் நக்சல்கள் தாக்குதல் நடத்தியதால், அப்போதிலிருந்து பிரம்மோற்சவம் தொடங்கும் முதல் நாளில் அம்மாநில முதல்வர் பட்டு வஸ் திரத்தை காணிக்கையாக வழங்கும் சம்பிரதாயம் தொடர்கிறது.

இம்முறை ரூ. 70 ஆயிரம் மதிப்பி லான பட்டு வஸ்திரம் சுவாமிக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. முதலில் கோயில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் சுவாமி சன்னதியில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தலையில் பட்டு வஸ்திரம் சுற்றப்பட்டு, அதன் மீது சுவாமிக்கு வழங்கும் பட்டு வஸ்திரம் வைக்கப்பட்டது. இதனை தலையில் சுமந்து வந்து, கோயில் பிரதான அர்ச்சகரிடமும், அதிகாரிகளிடமும் வழங்கினார் முதல்வர் ஜெகன். இந்த சர்க்கார் மரியாதை தினமும் நடைபெறும் வாகன சேவையிலும் உண்டு. பிரம்மோற்சவத்தின் போது, சுவாமி வாகன மண்டபத்தில் இருந்து எழுந்தருளி வரும்போது, முதல் ஆரத்தி, கோயில் முன் கொடுக்கப்படுகிறது. இதுவே சர்க்கார் ஆரத்தியாகும். இது இன்றுவரை அரசு சார்பில் கொடுக்கப்படும் ஆரத்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x