பல ஆயிரம் அறுவை சிகிச்சைகள் செய்த போலி மருத்துவர் 10 வருடங்களுக்குப் பிறகு உ.பி.யில் கைது

பல ஆயிரம் அறுவை சிகிச்சைகள் செய்த போலி மருத்துவர் 10 வருடங்களுக்குப் பிறகு உ.பி.யில் கைது
Updated on
2 min read

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

உத்தரபிரதேசத்தில் 10 வருடங் களாகப் பல ஆயிரம் அறுவை சிகிச்சைகள் செய்த போலி மருத்துவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

உ.பி.யின் பாக்பத் மாவட்டத்தின் சப்ரவுலியை சேர்ந்தவர் ஓம்பால் சர்மா(49). இவர், இந்திய விமானப் படையில் மருத்துவ உதவியா ளராக பெங்களூருவில் பணியாற்றி யுள்ளார். அப்போது அவர் மங்களூரை சேர்ந்த ராஜேஷ் என்ற அறுவை சிகிச்சை மருத்துவரின் கீழ் பணியாற்றி உள்ளார். இதில், அறுவை சிகிச்சை செய்வதை அன்றாடம் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு ஓம்பாலுக்கு கிடைத்துள்ளது. 2009-ல் இருவரது ஓய்விற்கு பின் ராஜேஷ், வெளி நாட்டின் ஸ்காட்லாந்து மருத்துவ மனை பணிக்கு சென்று விட்டார். ஆனால், ராஜேஷின் சான்றிதழ் களை நகல் எடுத்துக் கொண்ட ஓம்பால் சர்மா அதில் தனது படத்தை ஒட்டி போலி சான்றிதழை தயாரித்துள்ளார். தனது பெயரை ராஜேஷ் சர்மா எனவும் மாற்றி இதை உ.பி. மாநில மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். பிறகு, சஹரான்பூர் மாவட்டத்தின் தியோபந்த் நகரில் ஒரு மருத்துவ மனையும் துவக்கி, வயிறு சம்பந் தப்பட்ட அறுவை சிகிச்சைகளை அன்றாடம் ஐந்து முதல் ஏழு வரை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இந்திய மருத் துவ சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டவரிடம் மைசூரில் மருத்து வம் பயின்று புதிதாக வந்தவருடன் பேச வேண்டி வந்துள்ளது. இதில் ஓம்பால் சரியான தகவல் அளிக்கா மையால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், சஹரான் பூரில் தனியார் மருத்துவமனை நடத்தும் மற்றொருவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் உறுப்பினர் களில் ஒருவருமான டாக்டர் ரவி பிரகாஷ் குரானா, ஓம்பால் அறுவை சிகிச்சை செய்தவர்களிடம் விசா ரணை செய்துள்ளார். அதில் ஓம்பால் தன் சிகிச்சையில் செய்த பல்வேறு தவறுகளும் தெரியவந்துள்ளது. பிறகு குரானா, புகாராக சஹரான்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான பி.தினேஷ்குமாரிடம் அளித்துள் ளார். மேட்டூரின் சின்னதண்டா கிராமத்தை சேர்ந்த விவசாயப் பட்டதாரியான தினேஷ்குமார், தனது இரு அதிகாரிகளை கர்நாடகா விற்கு அனுப்பி விசாரித்துள் ளார். ஸ்காட்லாந்தில் பணியாற்றிய டாக்டர் ராஜேஷையும் தொடர்பு கொண்டு பேசியபோது ஓம்பால் ஒரு போலி மருத்துவர் என்பது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் தமிழரான தினேஷ் குமார் ஐபிஎஸ் கூறும்போது, ‘‘இந்த உண்மையை எப்படியோ அறிந்து கொண்ட இரு கிரிமினல்கள் கடந்த மாதம் ஓம்பாலிடம் உண் மையை கூறிவிடுவதாக மிரட்டி ரூ.40 லட்சம் கேட்டுள்ளனர். இதன் பிறகும் அஞ்சாமல் அவர் நம்மிடம் அளித்த புகாரில் இரு கிரிமினல்களும் கைதாகி சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர் களிடமும் விசாரித்த போது சந் தேகம் உறுதியானது. இவர்போல், வேறு எவரும் போலியாக உ.பி. யில் பணியாற்றுகிறார்களா என மருத் துவ சான்றிதழ்களை ஆய்வு செய்யும்படியும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளேன்’’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, இந்திய விமானப் படையில் பணியாற்றிய மருத்துவ உதவியாளருக்கான ஓய்வு ஊதி யத்தை இன்னமும் பெற்று வந்துள் ளார் ஓம்பால் சர்மா. இத்துடன் உ.பி. அரசு மருத்துவராகவும் பதிவு செய்தமையால் தியோபந்தின் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்துள்ளார். இதுவன்றி, தனது சொந்த மருத்துவமனையில் செய்த அறுவை சிகிச்சைகளுக்கு பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டம் மூலமாகவும் ரூபாய் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமாக பெற்றுள்ளார். ஓம்பாலின் அறுவை சிகிச்சை மருத்துவத்துக்கான டிப்ளமா சான்றிதழ் உ.பி. மருத்து வக் கவுன்சிலில் பதிவாகாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரு டன் வேறு எவருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in