

பிஹாரில் கிஷான்கஞ்ச் நகரில் உள்ள அரசு வேளாண் கல்லூரிக்கு கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார்.
கலாமுக்கு அஞ்சலி செலுத்த நேற்று டெல்லி புறப்படும் முன் நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கிஷான்கஞ்ச் வேளாண் கல்லூரிக்கு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வேளாண் கல்லூரி என பெயர் மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. பிஹாரின் வளர்ச்சியில் குறிப்பாக கிராமப் பகுதிகளின் முன்னேற்றத்தில் கலாம் தொடர்ந்து ஆர்வம் காட்டினார். கலாமின் இதயத்தில் பிஹாருக்கு நெங்கிய இடமுண்டு. அவர் மீது பிஹார் மக்கள் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள்” என்றார்.
கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிஹாரில் பெரும்பாலான பள்ளிக ளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.