Published : 01 Oct 2019 11:48 AM
Last Updated : 01 Oct 2019 11:48 AM

அஜித் பவாரை தோற்கடிக்க வியூகம்: தங்கர் சமூக தலைவரை களமிறக்கும் பாஜக

மும்பை
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரை தோற்டிக்கும் வகையில் தங்கர் சமூக தலைவர் கோபிசந்த் படால்கரை அந்த தொகுதியில் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில முன்னாள் துணை முதல்வராக பதவி வகித்தவர் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன். பாராமதி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவான இவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அலுவலக்தில் ராஜினாமா கடிதத்தை வழங்கிய அவர் அதற்கான காரணத்தை கூறவில்லை.

மகாராஷ்டிரா வங்கி ஊழல் வழக்கில் மும்பை போலீஸார் அஜித்பவார் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் சில நாட்களுக்கு முன்பு அவர் மீதும், சரத்பவார் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தது. இதன் பின்னணியில் அஜித்பவார் ராஜினாமா செய்தாரா என்ற கேள்வி எழுந்தது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஆளும் பாஜக, சிவசேனாவில் இணைந்து வருகின்றனர். எனவே அஜித் பவாரும் கட்சி த் தாவ திட்டமிட்டுள்ளாரா என கேள்வி எழுந்தது.

ஆனால் சரத் பவாரை சந்தித்து பேசிய அஜித் பவார் கட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்படுவதை தவிர்க்க ராஜினாமா செய்ததாக கூறினார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் மீண்டம் பாராமதி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரை இந்த முறை தோற்கடிப்பதற்காக பாஜக திட்டமிட்டு வருகிறது. பாராமதி தொகுதியில் தங்கர் சமூகத்தின் வலிமையான தலைவரான கோபிசந்த் படால்கரை பாஜக சார்பில் களமிறக்க முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் திட்டமிட்டுள்ளார்.

வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியில் இருந்த படால்கர் நேற்று பாஜகவில் இணைந்தார். அப்போது பேசிய பட்னவிஸ் ‘‘கோபிசந்த் புலியை போன்றவர். அவர் பாராமதி தொகுதியில் போட்டியிட தயாராக இருக்கிறார். தொண்டர்களாகி உங்கள் ஆதரவு இருந்தால் அவரை களமிறக்க கட்சி தலைமையிடம் நான் பரிந்துரைப்பேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x