திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்: பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்கினார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்

திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்: பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்கினார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
Updated on
1 min read

என்.மகேஷ்குமார்

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாளான நேற்று, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அரசு சார்பில் பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார். இரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர் மாட வீதிகளில் உலா வந்து பக்தர் களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற் சவ விழா, நேற்று மாலை கொடியேற்றத்துடன் பிரம்மாண்ட மாக தொடங்கியது.

முன்னதாக நேற்று காலை தேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் தங்க திருச்சியில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று மாலை 5.23 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள தங்க கொடி மரத்தில், வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க, கருடன் சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து, நேற்று மாலை ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கோயிலுக்கு எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்தபடி வந்து, கோயில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் சுவாமியை தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து அவருக்கு, ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர். பின்னர் இரவு திருமலையில் தங்கிய முதல்வர் ஜெகன், இன்று காலை விஜயவாடா செல்கிறார்.

ஏழுமலையான் கோயில் பிரம் மோற்சவம் நேற்று மிக பிரம்மாண்ட மாக தொடங்கியது. திருமலை முழுவதும் பிரம்மோற்சவத்தை யொட்டி பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இத னால் திருமலையே விழாக் கோலம் பூண்டிருந்தது. பிரம்மோற் சவத்தையொட்டி நேற்று திருமலை யில் புகைப்பட கண்காட்சி, மலர் கண்காட்சி போன்றவையும் தொடங்கப்பட்டது. இது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கி அக்டோபர் மாதம் 8-ம் தேதி வரை நடைபெற உள் ளது. இதில் முதல் நாளான நேற்று மாலை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர், இரவு முதல் வாகனமாக பெரிய சேஷ வாகனத் தில் தேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், வாகனத்திற்கு முன், காளை, குதிரை, யானை போன்ற பரிவட்டங்களும், இவை களை தொடர்ந்து பெரிய, சிறிய ஜீயர் சுவாமிகளின் குழுவினரும், இவர்களை பின் தொடர்ந்து தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநி லத்தை சேர்ந்த நடனக் கலைஞர் களின் நடன நிகழ்ச்சிகளும் பிரம்மோற்சவ விழாவினை களை கட்டச் செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in