Published : 01 Oct 2019 09:44 AM
Last Updated : 01 Oct 2019 09:44 AM

370-வது பிரிவு நீக்கத்தை எதிர்த்து வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடக்கம்

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த அரசியலமைப் பின் 370-வது பிரிவு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று முதல் விசாரிக்கவுள்ளது.

காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிரான மனுக்கள், காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செல்ல முடியாததற்கு எதிரான மனுக்கள், குழந்தைகளை சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் இந்த அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு வசதியாக மத்திய அரசு, கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அரசியலமைப்பில் 370-வது பிரிவை திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 ஆகப் பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. இந்த உத்தரவு அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராள மான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எம்.எல் சர்மா எனும் வழக்கறிஞர் தான் முதன் முதலில் இதுதொடர் பான வழக்கைத் தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பிலும், சஜாத் தலைமையிலான மக்கள் மாநாட்டுக் கட்சி சார்பிலும், மேலும் சிலரும் மனு தாக்கல் செய்தனர்.

மேலும் தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.பி.க்கள் முகமது அக்பர் லோன், ஓய்வுபெற்ற நீதிபதி ஹஸ்னன் மசூதி, முன்னாள் சபா நாயகர் அக்பர் லோன், ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் ஷீலா ரஷித் உள்ளிட்ட பலரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணை நடத்தியது. அப்போது இந்த மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் என தலைமை நீதிபதி அறிவித்தார்.

அதன்பின்னர் மூத்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையில், நீதி பதிகள் எஸ்கே கவுல், ஆர் சுபாஷ் ரெட்டி, பிஆர் காவே, சூர்ய காந்த் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று முதல் (அக்டோபர் 1) தனது விசாரணை யைத் தொடங்குகிறது.

இந்த அமர்வில் 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிரான மனுக்கள், காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செல்ல முடியா ததற்கு எதிரான மனுக்கள், குழந்தை களை சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் விசாரிக் கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வைகோ மனு தள்ளுபடி

காஷ்மீர் முன்னாள் முதல்வ ரும், தேசிய மாநாடு கட்சித் தலை வருமான பரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக் கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளு படி செய்தது. பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக் கோரி வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந் தார். இதையடுத்து பரூக் அப் துல்லா வீட்டுக் காவலில் வைக் கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் இந்த மனு மீது நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பரூக் அப்துல்லா, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வும், எனவே வைகோவின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

மேலும் இதுதொடர்பாக தகுந்த நீதிமன்றத்தில் மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புதிதாக மனுவை தாக்கல் செய்யுமாறு வைகோ வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x