Last Updated : 09 Jul, 2015 08:06 AM

 

Published : 09 Jul 2015 08:06 AM
Last Updated : 09 Jul 2015 08:06 AM

உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் சீன பிளாஸ்டிக் அரிசி கலப்பட புகார் மனு: விசாரணைக்கு ஏற்றது உயர் நீதிமன்றம்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப் படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி தொடரப்பட்டுள்ள மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் சுக்ரிவ துபே டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

உலகமயமாக்கல் காரணமாக சீனாவிலிருந்து அதிக அளவில் அரிசியும் வேறு பல நாடுகளிலிருந்து பருப்பு வகைகளும் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் இவற்றை தர பரிசோதனைக்கு உட்படுத்துவதில்லை.

சீனாவிலிருந்து இறக்குமதி யாகும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டுள்ளது. இந்த அரிசிக்கும் உண்மையான அரிசிக்கும் இடையிலான வித்தி யாசத்தை சாதாரண பொதுமக்க ளால் கண்டுபிடிக்க முடியாது. இந்த பிளாஸ்டிக் அரசி ஜீரணமாகாது. அத்துடன் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும்.

இதுபோல மாம்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களை செயற்கையாக பழுக்க வைப்ப தற்காக கால்சியம் கார்பைடு மற்றும் இதர ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி அரிசி, பருப்பு வகைகள், பழங்கள் உள்ளிட்டவற்றை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனங்களிடம் இருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.

இந்த மனுவை நேற்று பரிசீலித்த தலைமை நீதிபதி ஜி.ரோஹினி மற்றும் நீதிபதி ஜெயந்த் நாத் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இந்த மனு ஆகஸ்ட் 20-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படும் என்று தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x