

புதுடெல்லி,
''தங்கள் ஆசீர்வாதமும் எனக்கு முக்கியம், தாங்கள் அரசியலில் வந்ததிலிருந்தே இந்தியாவின் சித்திரம் மாறத் தொடங்கியது'' என்று அமெரிக்காவிலிருந்து நாடு திரும்புவதற்கு முன் மூத்த பாடகி லதா மங்கேஷ்ரின் 90வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தபோது கூறியதாக பிரதமர் மோடி மன்கி பாத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி செப்டம்பர் 21 அன்று ஹூஸ்டன் புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவில், அவர் ஐ.நா பொதுச் சபை மற்றும் "ஹவுடி மோடி!" புலம்பெயர் இந்தியர்களின் கூட்டங்களில் கலந்துகொண்டு நேற்று (சனிக்கிழமை) இரவு புதுடெல்லிக்கு திரும்பினார்.
இன்று மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:
நான் இந்தியா புறப்படுவதற்கு முன், மூத்த சகோதரி லதா மங்கேஷ்கரை போனில் அழைத்து அவரது 90வது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் கூறினேன், "தங்களை இந்த நேரத்தில் நான் அழைத்ததற்கு காரணம் தங்கள் பிறந்தநாளில் நான் விமானத்தில் இருப்பேன், எனவே முன்கூட்டியே வாழ்த்த வேண்டுமென்று விரும்பினேன். தங்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கட்டும், தங்கள் ஆசீர்வாதங்கள் எங்கள் மீது இருக்கட்டும். இதைத் தெரிவிக்கத்தான் நான் அமெரிக்காவிலிருந்து புறப்படும் முன்பே தங்களை அழைத்தேன்." என்றேன்.
போனில் அழைத்ததற்காக மகிழ்ச்சி தெரிவித்த மூத்த சகோதரி, எனது ஆசீர்வாதங்களையும் தான் நாடுவதாகத் தெரிவித்தார். அதற்கு, ''தங்களைப் போன்ற மூத்தவர்கள்தான் எங்களை ஆசிர்வதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டேன்.
இதற்கு பதில் அளித்த மூத்த சகோதரி, "இது எல்லாம் என் பெற்றோரின் ஆசீர்வாதம் மற்றும் ரசிகர்களின் அன்பு காரணமாக ஏற்பட்டதாக நான் நினைக்கிறேன். நான் ஒன்றுமில்லை" என்று பாடகி தெரிவித்தபோது, நான் குறுக்கிட்டு "இந்த தன்னடக்கமே எங்களுக்கு ஊக்கமளிக்கிறது, இவ்வளவு சாதித்த போதிலும், தங்கள் தன்னடக்கத்தையும் மதிப்புகளையும் நீங்கள் மறக்கவில்லை" என்றேன்.
"நான் உங்களை பார்க்கும்போதெல்லாம், நீங்கள் எப்போதும் எனக்கு சில குஜராத்தி உணவை வழங்கினீர்கள்... இந்த குடும்பம் போன்ற பாசம் எனக்கு சிறப்பு மகிழ்ச்சியைத் தருகிறது, இந்த முறை நான் மும்பைக்குச் சென்றபோது, உங்களைச் சந்திக்க விரும்பினேன், ஆனால் இறுக்கமான கால அட்டவணை காரணமாக அது சாத்தியமில்லை. நான் மிக விரைவில் வருவேன், உங்களால் தயாரிக்கப்பட்ட சில குஜராத்தி உணவுகள் கிடைக்கும்" என்று நான் உறுதியளித்தேன்.
அப்போது அவர், "உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாது. நீங்கள் இந்திய அரசியலில் வந்ததிலிருந்தே இந்தியாவின் சித்திரம் மாறத் தொடங்கியது என்பது எனக்குத் தெரியும், அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது," என்றார்.
நான் மீண்டும், ''தங்கள் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும். தீதி நீங்கள் தொடர்ந்து எங்கள் நாட்டு மக்களை ஆசீர்வதிப்பீர்கள், இதனால் எங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து சில நன்மைகளைச் செய்வார்கள். நீங்கள் எப்போதும் என்னை ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள் ... என்னைப் பற்றிய உங்கள் அக்கறைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என்றேன்.
இவ்வாறு பிரதமர் மோடி லதா மங்கேஷ்கரின் 90வது பிறந்தநாள் வாழ்த்துகுறித்து மன் கி பாத்தில் உரையின்போது தெரிவித்தார்.
லதா மங்கேஷ்கரின் தாய் ஷெவந்தி மங்கேஷ்கர் எனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர். குஜராத்தியே லதா மங்கேஷ்கர் உடனான பிரதமரின் நட்பை பிணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.