

ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
டெல்லியில் உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் அதிகம் நிறைந்த முக்கியப் பகுதி யாக பிரகதி மைதானம் உள்ளது. மதுரா சாலையில் அமைந்துள்ள இப்பகுதியை கடக்கும் வாகனங் கள் மிகவும் அதிகம். இதனால், அன்றாடம் அப்பகுதியில் வாகனங் களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இப்பகுதியைக் கடக்க சில சமயங்களில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகிறது. இதைத் தவிர்க்க பிரகதி மைதானத்தில் இருந்து பைரோ மார்க் வரை என 1.2 கி.மீ தொலைவுக்கு வாகனங் கள் செல்ல சுரங்கப்பாதை அமைக் கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சுரங்கப்பாதைகள் பழங்காலங் களில் நாட்டின் பல பகுதிகளில் அமைந்திருந்ததாகக் கருதப்படு கிறது.
இதனை மனதில் வைத்து நாட்டில் முதல்முறையாக வாகனங் களுக்கான சுரங்கப்பாதை டெல்லி யில் அமைகிறது. இந்த திட்டம் மார்ச் 2020-ல் முடியும்படி அமைக் கப்பட்டது. தற்போது இதில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டுவதால் அவரது உத்தரவின் பேரில் 3 மாதங்களுக்கு முன்ன தாகவே முடிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் டெல்லியில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் வட் டாரங்கள் கூறும்போது, "பிரகதி மைதானப் பகுதியின் போக்கு வரத்தில் சிக்கும் பல முக்கிய அதிகாரிகள் பிரதமரிடம் செய்த புகாரை அடுத்து அவர் இந்த திட்டத்தை விரைந்து முடிக்க உத்தர விட்டுள்ளார்.
இதன் பயனை பொறுத்து டெல்லியின் மற்ற இடங் களிலும் இதேபோன்ற சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும். இது போன்ற சுரங்கப்பாதை முதலில் பிரதமரின் அரசு குடியிருப்பில் இருந்து குடியரசு தலைவர் மாளிகை அருகே உள்ள அவரது அலுவலகம் வரை அமைக்கத் திட்டமிடப்பட்டது. பிறகு இதன் பலன் பொதுமக்களுக்கு முதலில் கிடைக்கவேண்டி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது’ என்றனர்.
டெல்லியின் இந்தியா கேட் மற்றும் உச்ச நீதிமன்றம் வழியாக பிரகதி மைதானம் பகுதியில் அன்றாடம் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை சுமார் 3.5 லட்சம் ஆகும். வாகன ஓட்டிகளுக்கு ஏற் படும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இப்பணி டெல்லி பொதுப்பணித்துறையினரால் கடந்த வருடம் துவக்கப்பட்டது.
புதிய சுரங்கப்பாதையில் செல்பவர்கள் ஐந்து சிக்னல்களை தவிர்க்கலாம். ரூ.777 கோடி செலவில் அமையும் இந்த சுரங்கப்பாதை பணி தற்போது அறுபது சதவிகிதம் முடிந்துள்ளது. தற்போது இதில் பிரதமர் மோடி தலையிட்டுள்ளதால் இது அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது.