Published : 28 Sep 2019 02:10 PM
Last Updated : 28 Sep 2019 02:10 PM

விலங்குகளுக்காக 10 ஏக்கரில் தினை, மக்காச்சோளம் : தீவன செலவில் 1 லட்சம் மிச்சம் பிடிக்கும் கர்நாடக சரணாலயம்

சிவமோகா,

கர்நாடாகா மாநிலத்தைச் சேர்ந்த சிவமோகாவில் அமைந்துள்ள பத்ரா வனவிலங்கு சரணாலயத்தில் வளரும் விலங்குகளுக்காக தீவனத்துக்காகவென்று தனியே 10 ஏக்கரில் தினை, மக்காச்சோளம் பயிரிட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்து சிவமோகா துங்கா நதியும் பத்ரா நதியும் சங்கமமாகும் இயற்கை எழில்மிக்க ஒரு நகரம். ஜோக் நீர்வீழ்ச்சிக்குப் புகழ்பெற்ற இங்கு மாண்டகடே பறவைகள் சரணாலயம், பத்ரா வனவிலங்கு சரணாலயம் ஆகியன உள்ளன. வனவிலங்கு சரணாலயத்தில் யானைகள், புலிகள் மற்றும் சிறுத்தைகள் வாழ்கின்றன.

இயற்கை வாழ்விடத்தில் உலாவும் சிங்கம், புலி போன்ற விலங்குகளை அருகில் சென்று ரசிக்கும் சஃபாரி பயணப் பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் விலங்குகள் தீவனத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிங்கம் மற்றும் புலி சஃபாரி அதிகாரி கன்சர்வேட்டர் ஏ.சி.எஃப் முகுந்த் சந்திரா ஏஎன்ஐயிடம் கூறியதாவது:

சிவமோகாவின் சிங்கம் மற்றும் புலி சஃபாரி அதிகாரிகள், சரணாலயத்தில் உள்ள மற்ற மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குளுக்காக ஒவ்வொருமாதம் வெளியிலிருந்து தீவனங்கள் வாங்கிவரப்பட்டது. தற்போது பணத்தை சேமிப்பதற்காக சஃபாரி பூங்காவிலேயே பத்து ஏக்கர் நிலத்தில் புல் மற்றும் தினை பயிரிடப்பட்டுள்ளது.

பணத்தை மிச்சப்படுத்துவதற்கும் விலங்குகள் நலனுக்காகவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. இது சஃபாரி என்ற விலங்கும் உலவும் இடத்தில் 'விலங்குகளுக்கான தீவனத் திட்டம்' என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான தொடக்கமாக அமைந்துள்ளது. சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த பூங்காவில் 150 க்கும் மேற்பட்ட தாவரவகைகள் உள்ளன, மேலும் ஒவ்வொரு நாளும் மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்காக கிட்டத்தட்ட ஒரு டன் புல் தேவைப்படுகிறது.

பணத்தை மிச்சப்படுத்த நாங்கள் பத்து ஏக்கர் நிலத்தில் புல் பயிரிட்டுள்ளோம், தினை, மக்காச்சோளம், ராகி, குதிரைவாலி போன்ற பயிர்கள் இங்கு பயிரிடப்படுகின்றன.

இந்தப் பகுதி முழுவதும் ஏற்கெனவே இந்த நிலம் பார்த்தீனியத்தால் மூடப்பட்டிருந்தது, அதை புல்வெளியாக மாற்றினோம், இந்தமுறையில் பயிரிட்டபிறகு தற்போது அரசு செலவினங்களிலிருலுந்து ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மிச்சமாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x