லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பாக வரித் துறை அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஓய்வு

லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பாக வரித் துறை அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஓய்வு
Updated on
1 min read

புதுடெல்லி

லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு களுக்கு உள்ளான வரித் துறை களைச் சேர்ந்த மேலும் 15 உயரதி காரிகளுக்கு மத்திய அரசு கட்டாய பணி ஓய்வு வழங்கியிருக்கிறது.

இதுதொடர்பாக மத்திய நேரடி வரி விதிப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

நாட்டில் வரி ஏய்ப்பு என்பது மிகத் தீவிரமான பிரச்சினையாக உள்ளது. எனவே, இதுதொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயத்தில், வரித் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரே, லஞ்சம் பெற்றுக் கொண்டு இதுபோன்ற குற்றங்கள் நடப்பதற்கு காரணமாக உள்ளனர்.

அதிகாரிகளின் துணையுடன் நடைபெறும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட முறைகேடுகளை கண்டறிவது என்பது சவாலான விஷயமாக இருந்து வருகிறது. இதன் காரண மாக, வரித் துறைகளைச் சேர்ந்த தவறிழைக்கும் அதிகாரிகளை களையெடுக்க மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இதன்பேரில், வரித் துறைகளின் செயல்பாடுகள், அதிகாரிகளின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின் றன. இதில், குற்ற நடவடிக்கை களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப் பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையி லான காலகட்டத்தில், வருமான வரித் துறை, நேரடி வரிவிதிப்புத் துறை, மறைமுக வரி மற்றும் சுங்க வரி ஆணையம், இந்திய வருவாய் துறை உள்ளிட்டபல்வேறு துறை களைச் சேர்ந்த 64 அதிகாரி களுக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம், பாலியல் துன்புறுத் தல் உள்ளிட்ட குற்றச்சாட்டு களின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் 15 அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மறைமுக வரி மற்றும் சுங்க வரி ஆணையத் தைச் சேர்ந்த 15 அதிகாரிகளுக்கும், ஜூலையில் 12 அதிகாரிகளுக்கும், ஆகஸ்ட் மாதத்தில் 22 அதிகாரி களுக்கும் கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டது என அந்த வட் டாரங்கள் தெரிவித்தன. - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in