

கொல்லம்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழித் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதை மறுக்க முடியாது என்றும் கடலோர பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்துள்ளது என்றும் பாதுகாப்புத் துறை அமைச் சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
கேரளாவின் கொல்லத்தில் மாதா அமிர்தானந்தமயி தேவியின் 66-வது பிறந்த நாள் விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
குஜராத்தின் கட்ச் பகுதியில் இருந்து கேரளா வரை நமது கடலோரப் பகுதி பரந்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழித் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதை மறுக்க முடியாது. நமது கடலோர பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற முறையில் நமது கடலோர மற்றும் கடல்வழி பாதுகாப்பு வலிமையாக உள்ளது என்று உறுதியளிக்கிறேன்.
சில மாதங்களுக்கு முன் காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்குப் பின், பாகிஸ் தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை நமது விமானப்படைகள் தாக்கி அழித்தன. நாம் யாருக்கும் இடை யூறு செய்யமாட்டோம். ஆனால், நமக்கு யாராவது இடையூறு செய் தால் அவர்களை நிம்மதியாக இருக்க விடமாட்டோம். வீரர்கள் செய்த உயிர் தியாகங்களை நாடு மறக்காது. வீரர்களின் குடும்பங் களுக்கு துணையாக நிற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷாவை கொலை செய்ய பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்ப தாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வடமாநி லங்களில் உள்ள விமானப் படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தவும் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.