

இந்தூர்
பிரபலங்கள், அரசியல்வாதிகளை ஏமாற்றி நடத்தப்பட்ட பாலியல் மோசடி விவகாரத்தில் 24 கல்லூரி இளம்பெண்களை சம்பந்தப்பட்ட கும்பல் ஈடுபடுத்தியது தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங் கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக கமல்நாத் பதவி வகிக் கிறார். இந்நிலையில், அங்குள்ள அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், விஐபி.க்களைக் குறி வைத்து ஒரு கும்பல் பாலியல் மோசடியில் ஈடு பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் உட்பட பெண் கள் சிலர், உதவி கேட்பது போல் விஐபி.க்களை அணுகி உள்ளனர். பின்னர் அவர்களுடன் அந்தரங்க மாகவும் இருந்துள்ளனர். அதை விஐபி.க்களுக்குத் தெரியாமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக் களை அந்த கும்பல் எடுத்துள்ளது.
பின்னர் சம்பந்தப்பட்ட விஐபி களுக்கு அந்தப் படங்கள், வீடி யோக்களைக் காட்டி ‘பிளாக் மெயில்’ செய்து கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். இந்த பாலியல் மோசடி வலையில் சிக்கிய அரசு பொறியாளர் ஒருவர், கும்பலின் மிரட்டலுக்குப் பயந்து அண்மையில் போலீஸில் புகார் அளித்தார். அதன்பின் போலீஸார் விசாரணை நடத்தியதில் திடுக் கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இதுதொடர்பாக 5 பெண்கள், கார் ஓட்டுநர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்ற னர். அவர்களுடைய வீடுகளில் சோதனையிட்டபோது, லேப்டாப் மற்றும் பல்வேறு செல்போன்களில் இருந்து 4000-க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்கள், வீடியோக்கள், ஸ்கிரீன் ஷாட்கள், ஆடியோக் களைப் போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
அவற்றில் ம.பி.யின் உயரதி காரிகள், காங்கிரஸ், பாஜக என அரசியல் கட்சிப் பிரமுகர்கள், விஐபி.க்கள் அந்தக் கும்பலைச் சேர்ந்த பெண்களுடன் அந்தரங்க மாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இந்த வழக்கை சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப் படும் ஸ்வேதா ஜெயின் என்ற பெண், எஸ்ஐடி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த மோசடியில் 24 கல்லூரி பெண்களை ஈடுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஸ்வேதா ஜெயினுக்கு உதவியாக ஆர்த்தி தயாள் என்ற பெண் இருந்துள்ளார்.
அரசு உயரதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற் கிணங்க கல்லூரி மாணவிகளை இந்த மோசடியில் ஸ்வேதா ஜெயின் ஈடுபடுத்தியுள்ளார். இது போன்று ஏராளமான கல்லூரி பெண்களை ஸ்வேதா தனது வேலைகளுக்காகப் பயன்படுத்தி யுள்ளதாக எஸ்ஐடி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கல்லூரிக்குச் செல்லும் இளம் பெண்களை மூளைச்சலவை செய்து இதுபோன்ற வேலை களுக்கு ஸ்வேதா பயன்படுத்தி வந்துள்ளார்.
பெண்களுடன் இருக்கும் பிர பலங்களை மிரட்டுவது மட்டு மல்லாமல் அந்த பெண்களையும் ஸ்வேதா ஜெயின் மிரட்டி வந்துள் ளார். விஷயத்தை வெளியே சொன்னால், அந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் அவர் மிரட்டி வந் துள்ளார்.
இந்த மோசடி மத்தியபிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - பிடிஐ