Published : 27 Sep 2019 04:59 PM
Last Updated : 27 Sep 2019 04:59 PM

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின் 2-வது ஆளில்லா விமானம் மீட்பு

அட்டாரி

இந்தியா எல்லைப் பகுதிக்குள் அமைந்துள்ள கிராமப்பகுதியில் பாகிஸ்தானின் ஆள் இல்லா விமானத்தை பஞ்சாப் போலீஸார் இன்று மீட்டுள்ளார்கள்.

கடந்த 3 நாட்களில் 2-வது ஆள்இல்லா விமானம் மீட்கப்பட்டுள்ளது, இந்த விமானத்தின் மூலம் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் வழங்க பாகிஸ்தான் திட்டமிட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த செவ்வாய்கிழமையன்று எல்லைப் பகுதியான தார்ன் தரன் பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒரு ஆளில்லா விமானத்தை பஞ்சாப் போலீஸார் மீட்டனர்.இந்த விமானங்களைப் பயன்படுத்தி தீவிரவாதிளுக்கு ஆயுங்களையும், வெடிபொருட்களையும் கொண்டு செல்ல பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவம் நடந்து இரு நாட்களில் மற்றொரு ஆள் இல்லாவிமானம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எல்லைப்பகுதியில் உள்ள மஹாவா எனும் கிராமத்தில் இந்த விமானம் இருப்பதை கண்டுபிடித்த போலீஸார் கண்டுபிடித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த 4 பேரை பஞ்சாப் போலீஸார் கைது செய்தனர். இந்த தீவிரவாத அமைப்பு ஜெர்மன் மற்றும் பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிறது அதில் ஒருவர் அளி்த்த தவலின்அடிப்படையில் இந்த விமானம் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் பல்வந்த் சிங், அக்ஸதீப் சிங், ஹர்பஜன் சிங், பல்பீர் சிங் ஆகியோர் எனத் தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து 5 ஏ.கே47 ரக துப்பாக்கிகள், 472 ரவுண்ட் சுடப்பயன்படும் குண்டுகள், 30 சீன துப்பாக்கிகள் 72 குண்டுகள், 9கை எறிகுண்டுகள், 5 செயற்கைக்கோள் தொலைபேசிகள், 2 மொபைல் போன்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன. மேலும் ரூ.10 லட்சம் போலி ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன

இந்த தீவிரவாத குழுக்கள் பஞ்சாப் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் எனவும், விசாரணையில் ஆள் இல்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கொண்டுவந்து கொடுக்க பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இந்த விமானங்கள் அனைத்தும் பறக்க இயலாத நிலையில் இருப்பதால் இனிமேல் பாகிஸ்தானுக்கு பறக்க முடியாது என்று போலீஸார் தெரிவித்தனர்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x