Published : 27 Sep 2019 12:11 PM
Last Updated : 27 Sep 2019 12:11 PM

எம்எல்ஏ கட்சித்  தாவல்; கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுவதா? – பாஜகவுக்கு அகாலிதளம் கண்டனம்

சிரோண்மணி அகாலிதள மூத்த தலைவர் சுக்பீர் சிங் பாதல்- கோப்புப் படம்

சண்டிகர்
ஹரியாணாவில் அகாலிதள கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்துள்ளநிலையில் இதனை அகாலிதளம் கடுமையாக விமர்சித்துள்ளது.

மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா சட்டப் பேரவைகளுக்கு ஒரே கட்டமாக வரும் அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை அக். 24-இல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட 18 மாநிலங்களில் உள்ள 64 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் அக். 21-இல் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. ஹரியாணாவில் தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. மனோகர்லால் கட்டார் முதல்வராக உள்ளார்.

ஹரியாணாவில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக போட்டியிடும் நிலையில் ஒரு சில இடங்கள் மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. ஹரியாணாவின் அண்டை மாநிலமான பஞ்சாபில் பலம் பொருந்திய எதிர்க்கட்சியான சிரோண்மணி அகாலிதளம் பாஜக கூட்டணியில் நீண்டகாலம் உள்ளது.

ஹரியாணாவில் ஒரு சில தொகுதிகளை அகாலிதளம் கடசிக்கு ஒதுக்குவை பாஜக வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்தநிலையில் ஹரியாணாவில் தற்போது அகாலிதளம் சார்பில் எம்எல்ஏவாக இருக்கும் பல்கவுர் சிங் நேற்று பாஜகாவில் இணைந்தார். இதனை அகாலிதளம் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘அகாலிதளம் எம்எல்ஏக்களை பாஜக வேட்டையாடி வருகிறது. இது கூட்டணி தர்மத்தை மீறிய செயல். இதனை ஏற்க முடியாது. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படும். பாஜக தலைமை இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்’’ என தெரிவித்துள்ளது.

ஹரியாணாவில் தேர்தல் நடைபெறும் நிலையில், பிரபல மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பாஜகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x