

இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடக அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவ காரத்தில் பெங்களூரு முன்னாள் காவல் ஆணையர் அலோக்குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
அண்மையில் மஜதவில் இருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் விஸ்வநாத், “கர்நாட காவில் மஜத - காங்கிரஸ் கூட்ட ணியை தக்க வைத்துக்கொள் வதற்காக முதல்வராக இருந்த குமாரசாமி, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, எடியூரப்பா உள் ளிட்ட அரசியல் தலைவர்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டார்'' என குற்றம்சாட்டினார்.
இதனை குமாரசாமி திட்டவட்ட மாக மறுத்தார். இருப்பினும், இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என சித்தரா மையா வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், கர்நாடக முதல் வராக அண்மையில் பொறுப்பேற்ற எடியூரப்பா, இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சிபிஐ அதிகாரி கள் 10-க்கும் மேற்பட்டோர் பெங்க ளூரு முன்னாள் காவல் ஆணை யரும், தற்போதைய கர்நாடக ஏடிஜி பியுமான அலோக் குமார் வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு நெருக்கமான இவரின் வீட்டில் சுமார் 8 மணி நேரம் தொடர் சோத னை நடத்தப்பட்டது.
அப்போது அலோக் குமாரின் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள், குறுந்தகடுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட் டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கு கைப்பற்றப்பட்ட ஆவ ணங்களை அடிப்படையாக கொண்டு, முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப் படுகிறது.
இது குறித்து குமாரசாமி கூறுகை யில், "நான் யாருடைய தொலை பேசியையும் ஒட்டுக்கேட்கவில்லை. என் மீது எந்த தவறும் இல்லாததால், எனக்கு எவ்வித பயமும் இல்லை. இந்த விவகா ரத்தில் என் பெயர் ஏன் இணைக்கப் பட்டது என்பதே தெரியவில்லை'' என்றார்