Published : 27 Sep 2019 09:58 AM
Last Updated : 27 Sep 2019 09:58 AM

டெல்லியில் பொது இடங்களில் மின்சார வாகனங்களுக்கு ‘சார்ஜர்’ வசதி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

டெல்லியில் பெருகி வரும் மின்சார வாகனங்களுக்கு ‘சார்ஜர்’ வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

டெல்லியில் பெருகிவரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப் படுத்தும் முயற்சியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு ஈடுபட்டுள்ளது. மேலும், டெல்லிவாசிகளும், பெட் ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களை புதிதாக வாங்கு வதை குறைத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு டெல்லியில் பதிவான வாகனங்களின் எண் ணிக்கை சுமார் 1.5 கோடி. இவற்றில் 72,600 வாகனங்கள் மின்சாரத்தால் இயங்குபவை. இவற்றில், 3,500 இரண்டு சக்கர வாகனங்களும், 1,100 நான்கு சக்கர வாகனங் களும், 68,000 இ-ரிக் ஷாக்களும் அடங்கும். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது

இதனால், மின்சார வாகனங் களின் பராமரிப்புக்காக டெல்லியில் பொது இடங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகனங் களுக்கு மின்சாரம் ஏற்றும் வசதி செய்யப்பட உள்ளது. இதற்கு ஏற்ற வகையில், டெல்லி அரசு புதிதாக சட்டம் இயற்றவும் தயாராகி வருகிறது.

அரசிடம் டெண்டர் எடுத்து பொது இடங்களில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஏராளமான தனி நபர்கள் நிர்வகித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் இடத்தில் இனி சார்ஜர் வசதி அமைக்க வேண்டி இருக்கும். இதற்கு தேவையான ஆலோசனைகளை முன்கூட்டியே வழங்குமாறும் அவர்களிடம் டெல்லி அரசு கோரியுள்ளது.

டெல்லி அரசின் திட்டப்படி, வாகனங்கள் நிறுத்துமிடம் சேர்த்து ‘சார்ஜர் பாயிண்ட்' என தனியாக வும், வாகனங்களில் மின்சாரம் ஏற்றும் 150 இடங்களும் அமைக்கப் பட உள்ளன. கைப்பேசிகளுக்கான ஒரு செயலியை அறிமுகப்படுத்தி மின்சாரம் ஏற்றும் இடங்களில் முன்கூட்டியே குறிப்பிட்ட நேரத்திற்கு பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்படஉள்ளது. இதற்கான கட்டணம் இணையதளம் வழியாகவே செலுத்தவும் திட்ட மிடப்பட்டு வருகிறது.

தற்போதைய நான்கு சக்கர மின்சார வாகனங்களானது, ஒரு முறை முழுமையாக மின்சாரம் ஏற்றினால் சுமார் 120 கி.மீ தொலைவு வரை செல்லும் வகையில் உள்ளது. இதற்கு ரூ.160 முதல் 200 வரை கட்டணமாக வசூலிக்கவும் டெல்லி அரசு கணக்கிட்டு வருகிறது.

ஏற்கெனவே டெல்லி நகரப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்கு பவையாக உள்ளன. இதற்கு இரண்டு டெப்போக்கள் அமைத்து அதில் அப்பேருந்துகளுக்கான மின்சாரம் ஏற்றப்பட்டு வருகிறது.

ஒருமுறை முழுமையாக மின்சாரம் ஏற்றப்படும் பேருந்து சுமார் 200 கி.மீ வரை செல்கிறது. இந்த வசதியை மேலும் ரூ.70 கோடி செலவில் மேலும் அதிகரிக்கவும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x