Published : 26 Sep 2019 09:40 PM
Last Updated : 26 Sep 2019 09:40 PM

உ.பி.யில் தலித் குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்கம்: மேஜிஸ்ட்ரேட் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய தந்தை 

கோரக்பூர், பிடிஐ

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சித்தார்த் நகர் மேஜிஸ்ட்ரேட் அலுவலகம் முன்பாக தன் குழந்தைகளுடன் போராட்டம் நடத்தினார் தலித் குடும்பத்தைச் சேர்ந்த தந்தை.

பள்ளிக் கல்விக்கட்டணம் செலுத்த இயலாத காரணத்தினால் தன் குழந்தைகளை பள்ளி நிர்வாகம் நீக்கியுள்ளது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வீரஜ் வயது 4, யுவ்ராஜ் வயது 8, ஜோதி வயது 10, சன்ச்சல் வயது 14 ஆகிய குழந்தைகளை பள்ளியிலிருந்து நீக்கியதையடுத்து தந்தை சிவகுமார் போராட்டம் நடத்தினார், அவர் கூறும்போது, சரஸ்வதி சிசு வித்யா மந்திர் தன் பிள்ளைகளை நீக்கியது என்று குற்றம்சாட்டினார், அதாவது ஆகஸ்ட் 30ம் தேதியே பள்ளியிலிருந்து இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தன்னால் கட்டனங்களை செலுத்த முடியவில்லை என்று பள்ளி முதல்வரிடம் தந்தை சிவக்குமார் விளக்கச் சென்ற போது அவரை சாதிரீதியாக வசை செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“நான் போலீஸுக்கு புகார் அளிக்கச் சென்றேன் அவர்கள் என் புகாரை ஏற்க மறுத்தனர்” என்றார் மேலும் மாவட்ட மேஜிஸ்ட்ரேட், ஆரம்பக் கல்வி அமைச்சர் சதீஷ் திவேதியிடமும் தான் முறையிட்டதாக அவர் தெரிவித்தார்.

என் குழந்தைகளுக்கு நீதி கிடைக்கவில்லை எனில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன், என்கிறார் அவர்.

இது தொடர்பாக அடிப்படைக் கல்வி அமைச்சர் திவேதியிடம் பிடிஐ தொடர்பு கொண்டு கேட்டபோது, மாவட்ட மேஜிஸ்ட்ரேட்டிடம் இது தொடர்பாக பேசவிருப்பதாகவும், பள்ளி நிர்வாகம் தவறு செய்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x