

முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சந்தீப் சிங், ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
அகாலிதள எம்.எல்.ஏ. பால்கவுர் சிங்கும் பாஜகவில் இணைந்தார்.
யோகேஷ்வர் தத் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் 60 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த வெண்கலம் வென்ற வீரர் ஆவார், இவர் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர். 2913-ல் இவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. 2014 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் கொள்கைகளினால் பெரிய அளவில் தான் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த யோகேஷ்வர் தத், ‘அரசியலில் சேர்ந்து நல்ல விஷயங்களைச் செய்ய முடியும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவரது பார்வையை எதிரொலித்த முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் சந்தீப் சிங் விளையாட்டில் நாட்டுக்குச் சேவை செய்ததையடுத்து அரசியலிலும் சேவை செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.