நாராதா வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி எஸ்.எம்.எச். மிர்சா கைது

நாராதா வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி எஸ்.எம்.எச். மிர்சா கைது
Updated on
1 min read

கொல்கத்தா,

நாராதா நியூஸ் இணையதளத்தினால் 2014-ல் நடத்தப்பட்ட ரகசியப் புலனாய்வு வீடியோவில் திரிணமூல் மூத்த தலைவர்கள், ஐபிஎஸ் அதிகாரி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி எஸ்.எம்.எச். மிர்சா சிபிஐ-யினால் கைது செய்யப்பட்டார்.

எஸ்.எம்.எச். மிர்சா கொல்கத்தாவில் உள்ள சிபிஐ கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகிறார்.

நாரதா நியூஸ் இணையதளத்தினால் 2014-ல் எடுக்கப்பட்ட ரகசியப் புலனாய்வு வீடியோவில் போலி நிறுவனங்களிடமிருந்து அந்த நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதற்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், ஐபிஎஸ் அதிகாரி மிர்சாவும் லஞ்சம் வாங்கியது தெரியவந்து மேற்கு வங்கமே அதிர்ந்தது.

2016ம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுகு முன்பாக இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி மேற்கு வங்க அரசியலில் பெரும்புயல் வெடித்தது. இது தொடர்பான மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

நாரத நியூஸின் மேத்யூ சாமுவேல் என்பவர் முதன் முதலில் இது தொடர்பாக தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பேசியவர்தான் இந்த ஐபிஎஸ் அதிகாரி மிர்சா. இவர் குழு எடுத்த வீடியோவில் சிகப்பு சோபாவில் அமர்ந்து கொண்டு மிர்சா பணம் வாங்கியது பதிவானது.

அதாவது மிர்சா, தற்போது பாஜகவில் இணைந்து விட்ட திரிணமூல் செல்வாக்கு மிகுந்த தலைவர் முகுல் ராயைக் குறிப்பிட்டு ‘அவருக்கு 60 ஏற்பாடு செய்யப்பட்டது’ என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. நாரதா ரகசியப் புலனாய்வு நடைபெற்ற போது 2014-ல் முகுல் ராய் திரிணமூல் கட்சியின் முக்கியத் தலைவர் ஆவார்.

இதே வீடியோவில் முகுல் ராயும், ‘மிர்சாவிடம் பேசிவிட்டேன் நீங்கள் அவரிடம் பேசலாம்’ என்று கூறியது பதிவாகியிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த விவகாரத்தில் முக்கிய தலைவர்களான சுப்ரதா முகர்ஜி, சுகதா ராய், கோஷ் தஸ்திதார், அபருபா போத்தர், பிரசூன் பானர்ஜி, மறைந்த சுல்தான் அகமெட் ஆகியோர் பணம் பெற்றது அப்போது பரபரப்பானது. இதே வீடியோவில் பணம் பெற்ற இன்னொரு நபர் திரிணமூல் மேயர் சோவன் சாட்டர்ஜி, இவரும் தற்போது பாஜகவுக்குத் தாவி விட்டார்ர்.

இந்நிலையில் இந்த நாரதா வழக்கில் முதன் முதலாக கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியானார் மிர்சா கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in