

அந்தமான் நிக்கோபார் தீவுகள் எதிர்காலத்தில் வாழ்வதற்கு தகுதியில்லாத இடமாக மாறக்கூடும் என்று உலக அளவில் காலநிலை மாற்றம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாக உள்ள ஐபிசிசி அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் முக்கிய ஆசிரியரான அஞ்சல் பிரகாஷ் கூறும்போது, “ இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் மற்றும் மாலத் தீவுகளில் வரும் காலங்களில் கடல் மட்டம் உயர்வு காரணமாக மக்கள் அவர்கள் வாழ்வாதாரப் பகுதியிலிருந்து இடப்பெயரக் கூடும். இதன் காரணமாக அப்பகுதிகள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக மாறக்கூடும்.
உலக அளவில் வெப்ப நிலை 2% சதவீதம் அதிகரித்தாலும் வருங்காலங்களில் கடல் மட்டம் உயரக்கூடும். இதன் காரணமாக உலகெங்கிலும் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்படக் கூடும்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட தற்போது கடலின் வெப்பநிலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. வெப்பநிலை உயர்வு காரணமாக பெருங்கடல்களில் வெப்பமண்டல சூறாவளிகள் ஏற்பட வழிவகுக்கும். மேலும் தாழ்வான கடலோரப் பகுதிகளில் உள்ள நகரங்கள் வெள்ள அபாயங்களை அதிகமாக சந்திக்கும்.
இதன் விளைவாக, உலகம் முழுவதும் 65 மில்லியன் மக்கள் வசிக்கும் சிறிய தீவுகள், மக்கள் வசிக்க முடியாத இடமாக மாறும்” என்று அஞ்சல் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.