Published : 26 Sep 2019 09:18 AM
Last Updated : 26 Sep 2019 09:18 AM

மோடியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் பாஜக

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

ஹரியாணா, மகாராஷ்டிரா மற்றும் பல்வேறு மாநிலங்களின் இடைத் தேர்தலில் உள்ளூர் பிரச்சனை களை பற்றி பாஜக பேசாது என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், இந்துத்துவா, தேசியம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு ஆகியவை மட்டுமே முன்னிறுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.

வரும் அக்டோபரில் நடை பெறும் மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைகளுடன் 18 மாநிலங் களுக்கான இடைத்தேர்தலும் நடை பெற உள்ளன. இதில், ஹரியாணா, மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களில் உள்ள பாஜக ஆட் சிக்கு எதிரான பல பிரச்சனை களும் நிலவுகின்றன. இவற்றை பற்றி பேசுவதாலும், அதில் எதிர்க் கட்சிகள் கூறும் புகார்களுக்கு அளிக் கும் பதிலாலும் தமக்கு இழப்பு ஏற்படும் என பாஜகவுக்குத் தெரிய வந்துள்ளது.

இதனால், அதுபோன்ற மாநில அளவிலானப் பிரச்சனைகளை பற்றி அதிகம் பேசுக்கூடாது என பாஜகவின் மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தெரியவந்துள் ளது. இதற்கு பதிலாக பாஜகவின் முக்கியக் கொள்கையான இந்துத்துவா, தேசியப் பிரச்சினை கள் மற்றும் பிரதமர் மோடியின் புகழை மட்டும் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான உத்தரவை தேசிய தலைவர்களான அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா தமது நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுக்கு உத்தரவிட் டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும் போது, ‘கட்சியின் முக்கிய கொள் கையான இந்துத்துவா தற்போது எதிர்பார்த்ததை விட வேகமாகப் பரவி வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, அசாமில் தேசிய குடியுரிமை பதிவேட்டுச் சட்டம் அமல், முத்தலாக் மீதான தடை போன்ற தேசிய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

2014-ல் வீசத் துவங்கிய மோடி அலை இன்னும் ஓய வில்லை. எனவே, இம்மூன்று விஷயங்கள் மீதானப் பிரச்சாரமே பாஜகவின் வெற்றிக்கு போது மானது என கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தன.

பிரதமர் மோடியும் இந்தமுறை தேர்தல் பிரச்சாரம் செய்ய உள் ளார். எனினும், குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தின் சட்டப்பேர வையை போல் அல்லாமல் மிகக் குறைந்த அளவிலான பிரச்சாரக் கூட்டங்களில் மட்டும் அவர் கலந்து கொள்வார் எனக் கூறப் படுகிறது. இதற்கு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு இரண்டா வது முறையாகக் கிடைத்த மாபெரும் வெற்றி ஒரு முக்கியக் காரணமாகி விட்டது. ஹரியாணாவில் நான்கும், மகா ராஷ்டிராவில் 12 கூட்டங்களிலும் பிரதமர் மோடிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அவர் அமெரிக்காவில் இருந்து செப்டம்பர் 28-ல் திரும்பிய பின்னர் இக்கூட்டங்கள் துவங்கும். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.

எனினும், மத்திய உள் துறை அமைச்சரும் கட்சியின் தேசியத் தலைவருமான அமித்ஷா இருமாநிலப் பிரச்சாரத்தில் தீவிர மாக பங்கு கொள்வதுடன், கர்நாட காவில் நடைபெற்ற 15 தொகுதி களுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்.

வேட்பாளர்கள் மனு தாக்கலுக் கான கடைசி தேதி இடைத்தேர் தலில் செப்டம்பர் 30 எனவும், இரு மாநிலங்களுக்கு அக்டோபர் 4 என்றும் உள்ளது. இதனால், பாஜக வேட்பாளர் பட்டியல் கடைசி நேரத்திலேயே வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றை, பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின் பாஜக வின் ஆட்சிமன்றக்குழு செப்டம்பர் 29-ல் கூடி வெளியிடும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x