

போபால்
மத்திய பிரதேச மாநிலத்தில் காங் கிரஸ் ஆட்சி உள்ளது. முதல்வராக கமல்நாத் பதவி வகிக்கிறார். இந்நிலையில், அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், விஐபி.க்களைக் குறி வைத்து ஒரு கும்பல் பாலியல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் உட்பட பெண்கள் சிலர், உதவி கேட்பது போல் விஐபி.க்களை அணுகி உள்ளனர். பின்னர் அவர்களுடன் அந்தரங்கமாகவும் இருந்துள்ளனர். அதை விஐபி.க்களுக்குத் தெரியாமல் புகைப் படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளனர்.
பின்னர் சம்பந்தப்பட்ட விஐபி.க்கு அந்தப் படங்கள், வீடியோக்களைக் காட்டி ‘பிளாக்மெயில்’ செய்து கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். இந்த பாலியல் மோசடி வலையில் சிக்கிய அரசு பொறியாளர் ஒருவர், கும்பலின் மிரட்டலுக்குப் பயந்து போலீஸில் புகார் அளித்தார். அதன்பின் போலீஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக 5 பெண்கள், கார் ஓட்டுநர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின் றனர். அவர்களுடைய வீடுகளில் சோதனையிட்டபோது, மடிக் கணினி மற்றும் பல்வேறு செல் போன்களில் இருந்து 4000-க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்கள், வீடி யோக்கள், ஸ்கிரீன் ஷாட்கள், ஆடியோக்களைப் போலீஸார் கைப்பற்றி உள்ளனர். அவற்றில் ம.பி.யின் உயரதிகாரிகள், காங் கிரஸ், பாஜக என அரசியல் கட்சிப் பிரமுகர்கள், விஐபி.க்கள் அந்தக் கும்பலைச் சேர்ந்த பெண்களுடன் அந்தரங்கமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த படங்கள், வீடி யோக்களைக் காட்டி சம்பந்தப்பட் டவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாலியல் மோசடி கும்பலிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விஐபி.க்களின் மொபைல் எண் களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த பெண்கள் சிலர் அடிக்கடி தலைமை செயலகத்துக்கு வந்து சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கும்பலிடம் சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி ஒரு வரிடம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் அலுவலகத்தில் விசாரணை நடந்துள்ளது.
மேலும், அவர்களுடைய மெமரி கார்டுகள், கணினி மற்றும் செல் போன்களில் அழிக்கப்பட்ட வீடி யோக்கள், படங்களை மீட்டெடுக் கும் பணியில் அதிகாரிகள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். விரை வில் 5000 ‘பைல்’களை எட்டிவிடும் என்று அதிகாரிகள் அதிர்ச்சியுடன் கூறியுள்ளனர்.
நட்சத்திர ஓட்டல்கள், கிளப்பு களில் விஐபி.க்களுடன் அந்தப் பெண்கள் அந்தரங்கமாக இருந்துள் ளனர். ஆனால், ஓட்டல் பதிவேடு களில் அந்த விவரங்கள் அழிக்கப் பட்டுள்ளன. எனினும், சிசிடிவி காட்சிகளை வைத்து விசார ணையை முடுக்கி விட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோக்கள் வெளியில் கசியாமல் இருப்பதை உறுதி செய்வதுதான் பெரும் சவாலாக உள்ளது என்று அதிகாரிகள் கவலைப்படுகின்றனர். எனினும், ஏற்கெனவே சில வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் பரவியதாகவும் கூறுகின்றனர்.
அரசு தொடர்புடைய உதவிகள் பெறுவதற்காக பாலியல் உறவுக்கு பெண்கள் ஒப்புக் கொள்வது போல் நடித்து இந்த மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
ஏனெனில், ஊழல் தடுப்பு சட்டம் (திருத்தம்) 2018-ன்படி, பாலியல் ரீதியாக ஆதாயம் பெறு வதும் ஊழல் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். குற்றம் நிரூபிக்கப் பட்டால், அவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று அதிகாரிகள் உறுதியாகக் கூறுகின்றனர்